- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை நீ ரொம்பவும் கேவலப்படுத்திட்டே, உம்மேல நான் கேஸ் போட போறேன் - இயக்குனர் பாலாவுக்கு...

என்னை நீ ரொம்பவும் கேவலப்படுத்திட்டே, உம்மேல நான் கேஸ் போட போறேன் – இயக்குனர் பாலாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவக்குமார்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாலா. சேது நந்தா அவன் இவன் நான் கடவுள் பரதேசி பிதாமகன் தாரை தப்பட்டை ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து அடுத்து இயக்குனா் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

சேது படம் மூலம் இயக்குனரான பாலாவுக்கு, தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து சமீபத்தில் சென்னையில் பாலா 25 என்ற பாராட்டு விழா நடந்தது. இதில் வணங்கான் படம் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவில் நடிகர்கள் சூர்யா சிவக்குமார் அருண் விஜய் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- Advertisement -

வணங்கான் படத்தில் முதலில் நடித்தது சூர்யாதான். ஆனால் ஒரு கட்டத்தில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். அதன்பிறகு வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடந்த பாலா 25 விழாவில் மேடையில் இருந்த சிவக்குமார், இயக்குனர் பாலாவிடம் சில கேள்விகள் கேட்டார். அப்போது பிதாமகன் படத்தில் தகதக என ஆடவா என்ற என்னுடைய பாடலை என் மகன் சூர்யாவையும் சிம்ரனையும் ஆட வைத்து என்னை கிண்டல் செய்துவிட்டாய். மனதார சொல், என்ன ஐடியாவில் அந்த பாடலை அந்த படத்தில் வைத்தாய்.

- Advertisement -

என்னை மானபங்கம் செய்வதற்காக அப்படி பண்ணுனியா, இல்லே சதாய்ப்பதற்காக அப்படி பண்ணினியா, உண்மையை சொல்லு என்று சிவக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குனர் பாலா, அந்த பாட்டும் உங்க ஆட்டமும், உங்க கூட ஆடியவர்கள் ஆட்டமும் பார்க்கவே ரொம்பவும் நகைச்சுவையாக இருந்துச்சு. அதனால்தான் அந்த பாடலை வைத்தேன் என்று பாலா சிரித்தபடியே கூறினார்.

இதைக்கேட்ட சிவக்குமார் அடப்பாவி, உலகம் முழுவதும் கொண்டாடின அந்த பாடல் நகைச்சுவையா இருந்துச்சா, உன்மேல கேஸ் போடப் போறேன். என்னய்யா இப்படி சொல்றான் இவன், அடப்பாவிகளா என சிரித்துக்கொண்டே பேசினார் நடிகர் சிவக்குமார். இயக்குனர் பாலா சொன்னதை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் கைதட்டி சிரித்தனர்.

- Advertisement -

சற்று முன்