- Advertisement -
Homeபொழுதுபோக்குவீட்லயே உங்க அம்மா அப்படிதான் செய்வாங்க, சமுதாயத்துல அதை ஏன் எதிர்பார்க்கறீங்க? - நடிப்பு அரக்கன்...

வீட்லயே உங்க அம்மா அப்படிதான் செய்வாங்க, சமுதாயத்துல அதை ஏன் எதிர்பார்க்கறீங்க? – நடிப்பு அரக்கன் எஸ்ஜே இப்படி ஒரு போடு போட்டுட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. இதில் 2 கேரக்டர்களில் நடிகர் அஜீத்குமார் நடித்திருந்தார். அவர் வில்லன் கேரக்டரில் நடித்த முதல் படமும் இதுதான். சிம்ரன் ஜோதிகா விவேக் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து நடிகர் விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன்பின் இயக்குனராக நடிகராக தன் கலை பயணத்தை தொடர்ந்த நடிகர் எஸ்ஜே சூர்யா இன்று வில்லன் நடிப்பில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக மாநாடு மார்க் ஆண்டனி ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என பல படங்களில் வில்லன் கேரக்டரில் ரசிகர்களை அசத்தி வரும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா அடுத்து அவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். கில்லர்ஸ் என்ற படத்தை அவரே டைரக்ட் செய்கிறார். நடிகர் இயக்குனர் என 2 குதிரைகளிலும் சவாரி செய்வதே தனது லட்சியமாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, நாம வாழ்க்கையில் தோத்துப் போன வீட்ல டம்ளரை வைக்கும் போது கூட டங்குன்னு தான் வெப்பாங்க. ஜெயிச்சா தான் நல்லா வெப்பாங்க. வீட்லயே அப்படி ஒரு ரெஸ்பெக்ட் கிடைக்கும் போது மத்தவங்களை நாம ஏன் கோவிச்சுக்கணும்? அவ்வளவுதான்.

- Advertisement -

அம்மா வந்து 4 பசங்க நல்லா வாழ்க்கையில் படிச்சாங்க ஒழுங்கா இருக்காங்க என்கிற போது அவங்களுக்கு டம்ளர்ல ஒழுங்கா தண்ணீர் வெப்பாங்க. ஊதாரித்தனமாக ஒருத்தன் சுத்தீட்டு இருந்தான்னா அவனுக்கு இந்தா பிடி அப்படீன்னு தானே வைக்கிறாங்க?

இதை அவங்க நல்லா இருக்கட்டுமே அப்படீங்கற உதாரணத்துல சொல்றதுதான். அவ்வளவுதான் ரெஸ்பெக்ட் வீட்டுல கிடைக்கதுன்னா ஊர்ல அந்த மரியாதை எப்படி கிடைக்கும். அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்னை ஏன் மதிக்காம போயிட்டே அப்படீன்னா நல்லா இருந்தா மதிக்க போறான். நல்லா இல்லேன்னா மதிக்க மாட்டான் அவ்வளவுதான். அதுக்கு எதுக்கு அவன் மேல நாம கோபப்படணும்? என்று எஸ்ஜே சூர்யா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்