- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த வித்தையும் படத்துல காட்டலையே? - மூளை இல்லாம தான் இந்த படத்தை பார்க்கணும் போல...

எந்த வித்தையும் படத்துல காட்டலையே? – மூளை இல்லாம தான் இந்த படத்தை பார்க்கணும் போல இருக்கு – ஒரே வார்த்தையில் சோலியை முடித்த ப்ளு சட்டை மாறன்

- Advertisement -

காமெடி நடிகர்கள், ஹீரோக்களாக மாறும்போது முதலில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், இதுவரை நம் காமெடி நடிப்பை பார்த்து சிரித்த ரசிகர்கள், ஹீரோவாக திரையில் காட்டியவுடன் சிரித்து விடக் கூடாதே என்பதுதான். காமெடி நடிப்பில் இருந்து டிராக் மாறிய வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசியில் ஒரு கேரக்டரில் ஹீரோவாக நடித்தாலும், மற்றொரு கேரக்டரில் காமெடியனாக நடித்தார்.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களிலும், அவரது காமெடி டயலாக் தொனியை மாற்றிக்கொள்ளவில்லை. அவ்வப்போது அவரது காமெடி டயலாக்தான் அவரை காப்பாற்றி கைதூக்கி விட்டது. அதுமட்டுமின்றி பேய்க்கதை, காதல் கதைகளில்தான் சந்தானம் ஹீரோவாக நடித்தார். ஆக்‌ஷன் ஹீரோவாக எடுத்தவுடன் ஜம்பம் காட்டவில்லை.

- Advertisement -

யோகிபாபு நடித்த படங்களில் அவர் வெற்றி பெற முக்கிய காரணம், அந்த படத்தில் கதையின் நாயகனாக மட்டுமே அவர் இருந்தார். அதாவது அந்த கேரக்டரில் அவர் பொருந்தியிருந்ததால் அந்த நடிப்பை ரசிகர்கள் மிக எளிதாக ஏற்றுக்கொண்டனர். அவரும் ரஜினி போல், விஜய் போல் ஓடுகிற டிரெயினில் துரத்தி ஏறியிருந்தாலோ, 300 பேரை சிங்கிளாக நின்று அடித்திருந்தாலோ ரசிகர்கள் பயங்கரமாக சிரித்திருப்பார்கள்.

ஆனால் யோகிபாபு அதுபோன்ற தவறுகளை செய்யவில்லை. மண்டேலா படத்தில் அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். காமெடி நடிகர் வரிசையில் சூரி காமெடியனாக நடித்து, இப்போது ஹீரோவாக ஜெயித்திருக்கிறார். அவரது கைவசம் இப்போது 5 படங்கள் இருக்கிறது.

- Advertisement -

அதே போல், சிவகார்த்திகேயனுடன் நடித்து, ரசிகர்களுக்கு சிரிப்பே வராத வகையில் காமெடி செய்துக்கொண்டு இருந்த சதீஷ் இப்போது கதாநாயகனாக மாறி நடித்திருக்கும் 2வது படம்தான் வித்தைக்காரன். இந்த படத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், ஜான்விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெங்கி என்பவர் டைரக்டர் செய்திருக்கிறார்.

இந்த படம் குறித்து பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், மேஜிக் செய்யும் கேரக்டரில் ஹீரோவாக நடித்துள்ள சதீஷ், எந்த வித்தையுமே படத்தில் செய்துகாட்டவில்லை. படத்தில் ஒரு காமெடி கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. வைரத்தை மீட்க வேண்டும் என்ற ஒரு காட்சிக்காக 2ம் பாகம் முழுவதும் படம் பயங்கரமாக போரடிக்கிறது.இந்த படத்தை பார்க்க மூளையை கழட்டி வெச்சிட்டுதான் போகணும் என்று விளாசி தள்ளியிருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.

- Advertisement -

சற்று முன்