- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் நீடிக்கும் பற்றாக்குறை… தேவை அறிந்து செயல்பட்டவர் நடிகர் தனுஷ் - நீக் பட...

தமிழ் சினிமாவில் நீடிக்கும் பற்றாக்குறை… தேவை அறிந்து செயல்பட்டவர் நடிகர் தனுஷ் – நீக் பட விழாவில் வெளிப்படையாக பேசிய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது அண்ணன் செல்வராகவனால் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற உருவக்கேலிக்கு ஆளானவர். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கலைஞனாக உயர்ந்திருக்கிறார். நடிகர் பாடகர் தயாரிப்பாளராக இருந்த தனுஷ் இயக்குனராகவும் அசத்திக்கொண்டு வருகிறார்.

ப பாண்டி ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கிய படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படம் சுருக்கமாக நீக் என சொல்லப்படுகிறது. இந்த படம் வருகிற 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் மேத்யூ தாமஸ் வெங்கடேஷ் மேனன் ரம்யா ரங்கநாதன் சரத்குமார் சரண்யா பொன்வண்ணன் சித்தார்த் சங்கர் ஆடுகளம் நரேன் ஸ்ரீதேவி உதய் மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது, ஜாலியாக வாங்க, ஜாலியா போங்க என்பது போன்ற படம்தான் இது. இந்த படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. நிறைய நடிகர்கள் தேவையாக உள்ளனர். அதனால் தான் நடிகர் தனுஷ் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். நிறைய இளம் நடிகர்கள் நடிகைகள் சினிமாவுக்கு வரவேண்டும். ஒரே சமயத்தில் இரண்டு வேறு விதமான கதைகளை கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராக தனுஷ் இருக்கிறார்.

ராயன் போன்ற ஒரு அதிரடி ஆக்சன் படத்தை இயக்கிய தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற காதல் படத்தை டைரக்ட் செய்திருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பெரிய பெரிய தத்துவங்களை எல்லாம் எளிமையாக தனது படங்களில் சொல்லி வருகிறார். ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராக தனுஷ் விளக்குகிறார். நீக் படத்தை பார்த்தபோது எனக்கு குஷி படத்தைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்று நடிப்பு அரக்கன் நடிகர் எஸ் ஜே சூர்யா இந்த விழாவில் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

சற்று முன்