- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் இயக்குவதை திடீரென ஒத்தி வைத்த பிரபல நடிகர், ஏன் இந்த திடீர் முடிவுன்னு தெரியலையே...

படம் இயக்குவதை திடீரென ஒத்தி வைத்த பிரபல நடிகர், ஏன் இந்த திடீர் முடிவுன்னு தெரியலையே – என்ன ஆச்சு தலைவரே தலைவரே

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று விஜய், அஜீத்குமார் கோலகலமாக கொண்டாடப்படுகின்றனர். இவர்கள் நின்றால், நடந்தால், நிமிர்ந்தால், பார்த்தால், ஏன் தும்மினால், இருமினால் கூட அது உடனடியாக செய்தியாகிறது. அதுவும் சோஷியல் மீடியாவில் இவர்களது தாக்கம், நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்தாலும், அடுத்த நிமிடமே அதை பார்க்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆனால், சினிமாவில் அஜீத், விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் அவர்களும் மற்ற நடிகர்களை போல, சின்ன பட்ஜெட் படங்களில், சாதாரண கதைகளில் நடித்தவர்கள்தான். அப்படிப்பட்ட நிலையில் இருந்த அவர்களை முன்னணி ஹீரோக்களாக மாற்றியது சில இயக்குநர்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அஜீத்துக்கு ஒரு காதல் கோட்டை என்றால், விஜய்க்கு ஒரு பூவே உனக்காக போன்ற படங்கள்தான்.

- Advertisement -

அப்படிபட்ட அவர்களை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி படங்கள் எதுவென்றால் அஜீத்குமாருக்கு வாலி, விஜய்க்கு குஷி. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் இயக்குநர் எஸ்ஜே சூர்யா. ஒரு இயக்குநராக, நடிகராக மிகப்பெரிய வெற்றி பெற்ற எஸ்ஜே சூர்யா, கடந்த 2005க்கு பிறகு, காணாமல் போனார். 10 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் திரும்ப தமிழ் சினிமாவுக்குள் இறைவி படம் மூலம் வந்து சேர்ந்தார்.

அதன்பிறகு ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ஸ்பைடர், மாநாடு, மெர்சல் படங்கள் எஸ்ஜே சூர்யாவை மீண்டும் பெரிய வெற்றியாளராக மாற்றியது. அதுவும் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம், எஸ்ஜே சூர்யாவை, நடிப்பு அரக்கனாக வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

- Advertisement -

இதையடுத்து, எஸ்ஜே சூர்யாவுக்கு நடிப்பதற்கான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் ஹீரோவாக நடிக்க 3 கோடி சம்பளம் எனவும், மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்க, 100 கோடி பட்ஜெட் படம் எனில், தனது சம்பளம் 8 கோடி ரூபாய் எனவும், 50 கோடி பட்ஜெட் படம் எனில், தனது சம்பளம் 5 கோடி ரூபாய் எனவும், அவர் தனது சம்பளத்தில் சலுகைகளை அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கில்லர் என்ற படத்தை இயக்க, எஸ்ஜே சூர்யா திட்டமிட்டு இருந்தார். வரும் பிப்ரவரி மாதம், படப்பிடிப்பை துவக்குவதற்கான முன் ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். இதற்காக வெளிநாட்டில் இருந்து விசேஷ கார் ஒன்றையும் அவர் வரவழைத்து இருந்தார்.

ஆனால், மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனக்கு பட வாய்ப்புகள் குவிவதால், கையில் இருக்கும் பணத்தை செலவழித்து படம் இயக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்துவிட்டார். படங்களில் நடித்து வரும் வருமானத்தை பெருக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் எஸ்ஜே சூர்யா. இது நல்ல முடிவுதாங்க தலைவரே, தலைவரே என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்