- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்துல அந்த மாதிரி சீன் மட்டும் வந்துடவே கூடாது… அதுல ரொம்பவும் உஷாரா இருக்கணும்...

என் படத்துல அந்த மாதிரி சீன் மட்டும் வந்துடவே கூடாது… அதுல ரொம்பவும் உஷாரா இருக்கணும் – இயக்குனர்களுக்கு நடிகர் சூரி போட்ட புது கண்டிஷன்!

- Advertisement -

காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சிதான் அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு அவர் நடித்த பல படங்களில் பரோட்டா சூரி என்றுதான் டைட்டில் கார்டில் அவரது பெயரே போடப்பட்டது. பிறகுதான் சூரி என்ற பெயருக்கு தமிழ் சினிமா மாறியது.

எந்த மாதிரியான காமெடி காட்சி என்றாலும் டயலாக் டெலிவரியிலும் உடல் மொழியிலும் முகத்தில் காட்டும் ரியாக்‌ஷனிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வித்தையை கற்றவராக நடிகர் சூரி இருந்ததால், பல படங்களில் அவருக்கு காமெடி ரோல் தொடர்ச்சியாக கிடைத்தது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா மனம் கொத்திப் பறவை படங்களில் சூரி காமெடி ஜெயித்தது.

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக நடித்த பிறகு அவர் காமெடி நடிகர் இமேஜில் இருந்து ஹீரோ அந்தஸ்துக்கு வந்துவிட்டார். விடுதலை 2 படத்தில் சூரிக்கு அதிக வாய்ப்பு இல்லை. என்றாலும் கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களில் நடித்து சூரி தன்னை ஒரு திறமையான நடிகராக நிரூபித்து விட்டார்.

அதிலும் மாமன் படத்தில் ஒரு பாசமிகு மாமா கேரக்டரில் நடிகர் சூரி வாழ்ந்து காட்டியிருந்தார். மேலும் இந்த படத்தின் டைரக்டர் பிரசாந்த் பாண்டியராஜன் என்றாலும் கதை திரைக்கதை வசனம் என எல்லாமே தந்தவர் நடிகர் சூரிதான். இந்த படம் முழுவதும் நடிகர் சூரியின் சொந்த வாழ்க்கை அனுபவங்களாக சினிமாவாக கதைக்களத்தில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூரி, தன்னிடம் கதை சொல்ல இயக்குனர்களிடமும் தன்னை வைத்து படம் இயக்க கமிட் ஆன இயக்குனர்களிடம் வைக்கும் முக்கியமான ஒரு கண்டிஷன் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், படத்தில் தப்பித் தவறி ஒரு காட்சியில் கூட எனக்கு காமெடி காட்சி வைத்து விடாதீர்கள் என்பதுதான்.

அப்படி ஓரிரு காட்சிகளில் நடித்தால் கூட மீண்டும் என் மீது காமெடி இமேஜ் ஒட்டிக்கொள்ளும். அப்புறம் ஹீரோவாக நடித்தால் ரசிகர்களிடம் எடுபடாது. அதனால் காமெடி சீன்கள் இல்லாமல் என் காட்சிகளை அமையுங்கள் என்று இயக்குனர்களுக்கு சூரி கண்டிஷன் போட்டிருக்கிறார். அதே போல் எந்த கேரக்டர் என்றாலும் முகத்தில் தாடியுடன்தான் நடிப்பேன். அந்த மாதிரி தாடி இருந்தால்தான் என் நடிப்புக்கு மெச்சூரிட்டியாக தெரியும் என்றும் இயக்குனர்களிடம் சூரி உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்