சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நேரங்களில் ஓட்டுக்காக வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள் மக்களை கவரவும், ஓட்டுகளை பெறவும் பலவித யுக்திகளை செய்வார்கள். பெண்களுக்கு துணி துவைத்து கொடுப்பார்கள். சேரியில் உள்ள குழந்தைகளை குளிக்க வைப்பார்கள். திடீரென ரோட்டோர ஓட்டல் கடையில் பரோட்டா மாஸ்டராக மாறி பரோட்டா செய்வார்கள். திடீரென டீ மாஸ்டராக மாறி டீ ஆத்தி டம்ளரில் கொடுப்பார்கள்.
ஆனால் இது தேர்தல் நேரத்தில் நடந்த விளம்பர நாடக காட்சி அல்ல, சென்னையில் நடந்த உண்மை சம்பவம். இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் சோனா சூட். ஒரு படத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகர். தமிழில் சந்திரமுகி படத்தில் வாய் பேசாதவராக ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார்.
மேலும் சமீபத்தில் வெளியான சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். ஒஸ்தி கள்ளழகர் அருந்ததி தமிழரசன் தேவி என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இந்தியில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் சோனா சூட் நடித்திருக்கிறார். விளம்பர படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏழை மக்களுக்கு பல விதங்களில் நிறைய நிதியுதவிகளை செய்தவர் நடிகர் சோனு சூட். ஏழை எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல வசதிகளை செய்து கொடுத்து, அந்த நோய் பரவிய நேரத்தில் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் அவர் பெரிய அளவில் பாராட்டப்பட்டவர்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த நடிகர் சோனு சூட், ரோட்டோரத்தில் இருந்த சின்ன டிபன் கடைக்கு சென்று பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சோனு சூட் அந்த டிபன் கடை உரிமையாளர் சாந்தி என்பவரை அறிமுகப்படுத்துகிறார். அதன் பின்பு அங்குள்ள இட்லி, தோசை சட்னி சாம்பார் வாளிகளை காட்டி தேங்காய் சட்னி, சாம்பார் என்று சோனு சூட் அறிமுகம் செய்கிறார்.
ஒரு தட்டில் இட்லிகள் வடைகள் வைத்து 3 இட்லிகள் 2 வடை விலை 35 ரூபாய் என்று சொல்கிறார். அதன்பிறகு சோனு சூட் சமையல்காரராக மாறி அவரே தோசைக்கல்லில் மாவு ஊற்றி தோசை சுடுகிறார். சாதாரண தோசை விலை 15 ரூபாய் என்று கடையின் உரிமையாளர் சாந்தி சொன்னாலும், சோனு சூட் விளையாட்டாக அதை 30 ரூபாய் என்று இரட்டிப்பாக்குகிறார். தனது இன்ஸ்டா கிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர் சோனு சூட், மேரி இட்லி சாம்பார் கீ டுகான் என்று (எனது இட்லி சாம்பார் கடை) என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்:https://x.com/SonuSood/status/1895421856590815542





