மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தொடர்ந்து பைரவா சர்கார் படங்களில் நடிகர் விஜயுடன் ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பிறகு அண்ணாத்த தொடரி சாமி 2 தானா சேர்ந்த கூட்டம் ரஜினி முருகன் ரெமோ சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் தனுஷ் விக்ரம் சூர்யா சிவகார்த்திகேயன் விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
நடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட நடிகை சாவித்திரி தேவி வாழ்க்கை வரலாறு படமான மகாநடி என்று தெலுங்கிலும் நடிகையர் திலகம் என தமிழிலும் வெளியான படத்தில் அவரது கேரக்டரில் நடித்திருந்தார். மிகவும் அழுத்தமான சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷூக்கு இந்த படம் சிறந்த நடிகை என்ற தேசிய விருதை பெற்றுத் தந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி, தனது 15 ஆண்டுகால நெருங்கிய நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் உப்பு கப்புரம்பு என்ற காமெடி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சுகாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் பிரமோசனுக்காக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, எனக்கு மனம் சரியாக இல்லை, ஒருவேளை அப்செட் ஆகிவிட்டால் நான் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் பண்ணுவேன். அப்போது நல்ல இசையை கேட்பேன். அதுமட்டுமின்றி வீட்டில் நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். எந்த அப்செட் வந்தாலும் அந்த நாய்க்குட்டி முகத்தைப் பார்த்தால் எல்லாம் காணாமல் போய்விடும் என்று கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





