- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 எப்போதான் வரப்போகுது... ஒரே ஒரு வார்த்தையை சொல்லி அனைவரையும் வாய் அடைக்க வைத்த...

விடுதலை 2 எப்போதான் வரப்போகுது… ஒரே ஒரு வார்த்தையை சொல்லி அனைவரையும் வாய் அடைக்க வைத்த சூரி… எப்பா போதும்டா சாமி…

- Advertisement -

சிறிய பட்ஜெட் படமாக ஆரம்பித்து இன்று ஆலமரம் போல் விரிந்து நிற்கும் திரைப்படம் தான் விடுதலை. அசுரன் படத்தை எடுத்த முடித்த கையோடு அடுத்ததாக, சூர்யாவை வைத்து வாடி வாசலை எடுக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் குறுநாவலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

- Advertisement -

படத்தை தயாரிக்க கலைப்புலி எஸ் தாணுவும் முன் வந்தார். ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக உடனடியாக சூர்யா அந்த திரைப்படத்தின் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சிறிய இடைவெளியில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை எடுக்கலாம் என திட்டமிட்டார் வெற்றிமாறன்.

 

- Advertisement -

இப்படியாக ஆரம்பித்தது தான் விடுதலை திரைப்படம். ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்திற்கான வேலையை அவர் தொடங்கினார். படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டதுமே அதன் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் இதற்கான சூட்டிங் நடத்தப்பட, ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகின.

 

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக எடுக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். இதற்கு தயாரிப்பு நிறுவனமும் இசைவு கொடுக்க, இரண்டு பாகங்களாக விடுதலை உருவாவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

 

அப்போதே படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் பாதி அளவு எடுத்து விட்டதாகவும், கொஞ்ச நாட்கள் மட்டும் தான் படபிடிப்பு இருக்கப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் சொல்லியபடி எதுவுமே தற்போது நடக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டாம் பாகத்திற்காக அவர் எட்டு மாதங்களுக்கும் மேல் சூட்டிங் நடத்தி வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியரை களம் இறக்கி இருக்கிறார் வெற்றிமாறன்.

 

இதுபோக எஸ் ஜே சூர்யாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில், பேட்டியளித்த சூரியிடம் விடுதலை 2 படத்தின் ரிலீஸ் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை. அநேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் இறுதியில் வெளியாகலாம். இன்னும் சூட்டிங் நடைபெற்று தான் வருகிறது. சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். கிஷோர் சாரும் நடித்திருப்பதாக தெரிகிறது. இது எல்லாம் எங்கள் இயக்குனர் முடிவு செய்வார் என்று பேசி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், இனிமேல் தான் சமுத்திரக்கனி படத்திற்கு உள்ளேயே வருகிறாரா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்