- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்டாடி படத்துக்கு கிடைத்த வரவேற்பு, தனது சம்பளத்தை மளமள என உயர்த்திய நடிகர் சூரி -...

மண்டாடி படத்துக்கு கிடைத்த வரவேற்பு, தனது சம்பளத்தை மளமள என உயர்த்திய நடிகர் சூரி – ஆனா சாட்டிலைட் வியாபாரம் நடக்கலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் 50 பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் நடிகர் சூரி. அதன்பிறகு பல படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

அதன்பிறகு அவர் நடித்த கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் போன்ற படங்களில் மாமன் படம் பெரிய வெற்றியை பெற்றது. விடுதலை 2 படம் சரியாக போகவில்லை. கொட்டுக்காளி படமும் ஊத்திக்கொண்டது. கருடன் படத்தில் நடிகர்கள் சசிக்குமார் உன்னி முகுந்தன் போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்ததால் அந்த படம் ஓடியது.

- Advertisement -

எனினும் இப்போது திரைக்கு வந்துள்ள மண்டாடி படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 படத்தை விட இந்த படம் நன்றாக உள்ளது என்ற ஒப்பீட்டு அடிப்படையில் இந்த படத்துக்கு அதிகமான ரசிகர்கள் செல்கின்றனர். சூரி ஹீரோவாக நடித்த படம் என்ற ஒரு காரணமும் இந்த படத்துக்கு ரசிகர்களை வரவிடாமல் தடுக்கிறது.

ஏனென்றால் என்னதான் ஒரு நடிகர் ஹீரோயிசம் காட்டினாலும் காமெடி நடிகராக அவரை உள்வாங்கி கொண்ட ரசிகர்களுக்கு பெரிய ஆக்சன் ஹீரோவாக ஏற்றுக்கொள்வது கடினம். எனினும் படத்தில் வரும் படகு போட்டி காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருப்பதால் மண்டாடி படத்தை காண ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த படம் சாட்டிலைட் வியாபாரம் இன்னும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மண்டாடி ஒரு மொக்கை படம், 10 நிமிட காட்சிக்காக இரண்டரை மணி நேரம் படத்தை பார்க்க முடியுமா? என்று ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மண்டாடி படத்தில் நடிக்க ரூ. 6.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் சூரி, அடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ரூ. 16 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

மேலும் இதையடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கும் சூரி தனது சம்பளத்தை ரூ. 35 கோடியாக உயர்த்தியிருக்கிறார். மண்டாடி படம் இன்னும் சில தினங்களில் ரூ. 50 கோடியை கிராஷ் கலெக்சன் செய்யும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் கூறும் நிலையில், ரூ. 35 கோடியாக தனது சம்பளத்தை சூரி உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்