- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 படம் ஹிட் ஆன உடனே பழசெல்லாம் மறந்து போச்சா? பரோட்டா சூரின்னே ஒருத்தர் இல்லையாம்...

2 படம் ஹிட் ஆன உடனே பழசெல்லாம் மறந்து போச்சா? பரோட்டா சூரின்னே ஒருத்தர் இல்லையாம் – இதை சொல்றதே நம்ம மண்டாடி ஹீரோ சூரி தான்!

- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உருவான ஒரு படமாக வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தில் காமெடி ரோலில் சூரி நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் வெளியூருக்கு வெண்ணிலா கபடிக்குழு கபடி விளையாட செல்வார்கள். அதில் சூரியும் ஒருவர். ஒரு ஓட்டலில் 50 பரோட்டா ஒருவர் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் ரூ. 100 பரிசு தருவதோடு சாப்பிட்ட பரோட்டாக்களுக்கு காசு தர வேண்டாம்.

- Advertisement -

சவாலில் அப்படி 50 பரோட்டா சாப்பிட முடியவில்லை என்றால் ரூ. 100 சாப்பிடுபவர் சப்ளையருக்கு தருவதோடு சாப்பிட்ட பரோட்டாக்களுக்கும் காசு தர வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். அந்த போட்டியில் நடிகர் சூரி கலந்துக்கொண்டு சாப்பிடுவார்.

கடைசியில் 44 பரோட்டா தான் சாப்பிட்டே என்று சப்ளையர் சூரியை ஏமாற்ற, இல்லே நான் 50 பரோட்டா சாப்பிட்டேன், நீங்க கள்ள ஆட்டம் ஆடறீங்க? கோட்டை எல்லாம் அழி நான் முதலில் இருந்து சாப்பிடுகிறேன் என்பார். இதைக் கேட்டு அந்த ஓட்டல் சப்ளையர் மிரண்டு போவது போல அந்த காமெடி காட்சி இருக்கும். அதுதான் நடிகர் சூரியை காமெடி நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

- Advertisement -

அதன்பிறகு பல படங்களில் டைட்டில் கார்டில் பரோட்டா சூரி என்றுதான் அவரது பெயரே வரும். ஆனால் விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக நடித்த பிறகு அவரது நடிப்பில் வெளியான மாமன் மண்டாடி படங்கள் நல்ல வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் பரோட்டா சூரி என்று ஒருவர் கிடையாது என்று செய்தியாளர்களிடம் நடிகர் சூரி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சூரி, பரோட்டா சூரி என்றே ஒருவர் கிடையாது. அது படத்தில் வந்த ஒரு காட்சி, என்னுடைய பெயர் சூரி மட்டும்தான் என்று காட்டமாக பேசியிருக்கிறார். அன்று காமெடி ரோலில் அவருக்கு பெயர் கொடுத்து அடையாளம் கொடுத்ததே பரோட்டா சூரி தான். இன்று ஹீரோவான பிறகு பரோட்டா சூரி என்றால் அசிங்கமாக இருக்கிறதா? அவமானமாக இருக்கிறதா? 2 படம் ஹிட் ஆகிட்டா பழசு எல்லாமே மறந்து போயிடுமா பரோட்டா சூரி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்