- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்டிப்பாக காமெடி கேரக்டரில் மீண்டும் நடிப்பேன்… ஆனால் அந்த படங்களில் மட்டும்தான் - நடிகர் சூரி...

கண்டிப்பாக காமெடி கேரக்டரில் மீண்டும் நடிப்பேன்… ஆனால் அந்த படங்களில் மட்டும்தான் – நடிகர் சூரி போட்ட புது கண்டிஷன்!

- Advertisement -

காமெடி நடிகராக இருந்து இப்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை கருடன் படங்களின் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் மாமன் படம் வெளியாகி உள்ளது. தாய் மாமன் உறவை மையப்படுத்திய இந்த கதையில் சூரியின் நடிப்பு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.

நடிகர் சூரி நடித்த மாமன் படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களாக நடிகர் சூரி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாமன் படம் திரையிட்டுள்ள தியேட்டர்களுக்கு நேரில் விசிட் அடித்து ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் திண்டுக்கல்லில் தியேட்டர்களில் ரசிகர்களை வந்த நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நடிகர் சூரி கூறியதாவது, மாமன் படம் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்திலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். கொஞ்சம் கூட படத்துக்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.

வருடா வருடம் குடும்பம் சார்ந்த படங்கள் எடுக்கவும் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். அனைத்து குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கதாநாயகனாக தொடர்ந்து வெற்றிப்படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

நான் நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா, கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்பதை மக்களே கூறட்டும். மக்கள் வரவேற்பு இல்லாமல் எந்த விஷயமும் நடக்காது. கதாநாயகனாக தற்போது நடிக்கும் வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவை வாய்ப்பு வந்தால் கிடைத்தால் கண்டிப்பாக காமெடி ரோலில் நடிப்பேன்.

சமூக வலைதளங்களில் புதுப்படங்கள் வெளியாகும் போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. நல்ல படங்களை பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் படம் எப்படி வரும்? மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும்போது, தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மக்கள் இதை வரவேற்கக் கூடாது என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்