- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை... எங்க தலைவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள்...

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை… எங்க தலைவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பதற்றம்…

- Advertisement -

பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகில் புகழின் உச்சிக்கு சென்றவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் அதிரிபுதிரியான வெற்றியைப் பெற, இந்திய திரையுலகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு தெலுங்கு திரைப்படம் முதல்முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டியது பாகுபலி திரைப்படத்தில்தான். இதனால் பான் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ், அதன் பிறகு முழுக்க முழுக்க பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

பிரபாஸின் இந்த முடிவு முட்டாள்தனமானது என்று தான் கூற வேண்டும். பாகுபலி கொடுத்த தாக்கத்தையே பிற படங்கள் கொடுக்கும் என்று அவர் எண்ணினாரோ என்னவோ, எப்போதும் ஆக்சன், வி எப் எக்ஸ், ஆயிரம் பேரை சுமந்து கொண்டு அடிப்பது போன்ற கதை களத்திற்கே தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

இதன் தாக்கமாக, பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு வெளியான சாகோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி, மண்ணை கவ்வியது. திரைக்கதையில் எந்த விதமான கூடுதல் மெனக்கெடல்களும் இல்லாததால், அந்தப் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதன் பிறகு ராதே ஷ்யாம் என்னும் திரைப்படத்தில் அவர் நடித்தார்.

காதல் திரைப்படத்திற்கு எதற்கு ஐயா இவ்வளவு பிரமாண்டம் என ரசிகர்களையே கேள்வி எழுப்பும் வகையில் இருந்த இந்த திரைப்படம், வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இதன் பிறகு, வரலாற்று காவியமான ஆதி புரூஷ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை சோதித்தார் பிரபாஸ். தற்போது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்தியில் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சலார் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இது போக கல்கி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

பாகுபலி படத்தில் நடித்த போதே அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டது. தற்போது அதன் தீவிரம் அதிகரித்துள்ளதால், அவர் ஐரோப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையிலேயே ஓய்வில் இருக்கும் அவர் விரைவில் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்