நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். பிறகு தனியாக கதாநாயகனாக பல படங்களில் நடித்தவர். பிற்காலத்தில் டிவி சீரியல்களிலும் நடித்தார். அதன்பிறகு தன்னை ஒரு சொற்பொழிவாளராக மாற்றிக்கொண்டார்.
அவரது இரண்டு மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக உள்ளனர். கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சூர்யா நடித்த கங்குவா படம், உலகம் முழுவதும் 38 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இயக்குநர் அமீர், சிவக்குமார் குடும்பம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பருத்திவீரன் தயாரிப்பு சம்பந்தமாக 17 ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடந்துவருகிறது. நான் மட்டுமே அந்த வழக்குக்காக கோர்ட்டில் ஆஜராகி வருகிறேன் என அமீர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் சூர்யாவுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று மவுனம் பேசியதே படத்தில் கற்றுக்கொடுத்ததே இயக்குநர் அமீர்தான். அதுவரை சூர்யாவுக்கு நடிக்கவோ, டான்ஸ் ஆடவோ, பைட் பண்ணவோ தெரியாது. அதனால், சிவக்குமாருக்கு அமீர் மீது பெரிய நம்பிக்கை வந்துவிட்டது.
பருத்தி வீரன் படத்தில் கார்த்தியை நடிக்க சிவக்குமாரிடம் கேட்ட போது, அவன் இங்கிலீஸ்ல தான் பேசறான். வெள்ளையா இருக்கான். இவன் எப்படி பருத்திவீரன் படத்தில் நடிக்க முடியும், என கார்த்தி குறித்து அமீரிடம் சொல்லி இருக்கிறார். அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், என அமீர் கூறியதால் கார்த்தி, பருத்திவீரன் படத்தில் நடிக்க சிவக்குமார் சம்மதித்தார்.
கிராமத்தில், ஒரு நாலாந்தர ரவுடியாக பருத்திவீரனை காட்டவேண்டும் என்பதால், படத்தின் கேரக்டருக்காக பல மணி நேரம் கார்த்தியை வெயிலில் நிற்க வைத்து கருப்பாக்கினார் அமீர். வீட்டுக்குப் போன கார்த்தியை பார்த்து, என்னடா இப்படி ஆயிட்டே, இந்த படத்துல நடிக்கவே வேண்டாம் என சிவக்குமாரும், அவர் மனைவியும் அழுதிருக்கின்றனர். சிவக்குமார் குடும்பத்துக்கும், அமீருக்கும் முதல் கான்ட்ரவர்சி ஆரம்பமானதே அங்குதான். அப்புறம் சூர்யாவை போலவே, கார்த்தியையும் பெரிய கதாநாயகனாக முதல் படத்திலேயே கொண்டு வந்தார் அமீர். ஆனால் அதையெல்லாம் சூர்யா, கார்த்தி கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





