- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 க்கு முன்பே ரசிகர்களை சந்திக்க வருகிறார் கொட்டுக்காளி சூரி - ரிலீஸ் தேதி...

விடுதலை 2 க்கு முன்பே ரசிகர்களை சந்திக்க வருகிறார் கொட்டுக்காளி சூரி – ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு – போடு வெடிய, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் சூரி, துவக்கத்தில் காமெடி நடிகராக தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். காதல், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் சில காட்சிகளில் காணப்பட்ட நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம் படத்திலும் சூரிக்கு நல்ல நடிப்பு வாய்ப்பு அமைந்தது.

தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களில் நடித்து சிவகார்த்திகேயனுடன் காமெடி கலக்கிய சூரி, இரட்டை நாயகர்களில் ஒருவர் போல தான் அந்த படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், அண்ணாத்த, கத்தி, வேதாளம் என ரஜினி, விஜய், அஜீத்குமார் படங்களில் நடித்தார் சூரி.

- Advertisement -

இந்நிலையில் காமெடியில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற சூரி, முன்னணி காமெடி நடிகராக மாறினார். சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் ஹீரோவாக நடித்ததால் காமெடி கேரக்டர்களில் நடிக்க சூரிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு முன்னணி காமெடி நடிகராக உருவானார்.

அப்போது, இயக்குனர் வெற்றிமாறன் சூரிக்கு கதாநாயகனாக நடிக்க விடுதலை படத்தில் பிரமோசன் கொடுத்தார். துவக்கத்தில் அதற்கு சூரி நிறைய பயந்தார். ஏனெனில் வெற்றிமாறன் படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்துவிட்டு, மீண்டும் ஹீரோ வாய்ப்பு வராத பட்சத்தில் காமெடி நடிகராக மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் வர முடியுமா, வந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

- Advertisement -

எனினும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நெருங்கிய நண்பர்கள் கொடுத்த தைரியத்தால், விடுதலை படத்தில் குமரேசன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்றார் சூரி. தொடர்ந்து கருடன் படமும் அவருக்கு நல்ல ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்திருக்கிறது. துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் சூரி.

இந்நிலையில் விடுதலை 2 படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்ற சொல்லப்பட்டாலும் அது உறுதியாகவில்லை. ஆனால் கொட்டுக்காளி படம் ரிலீஸ் தேதி உறுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ், தி லிட்டில் வேவ் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான் கொட்டுக்காளி. கூழாங்கல் படத்தை இயக்கிய டைரக்டர் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார். வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி, கொட்டுக்காளி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலத்த பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்