- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படம் ரிலீஸ் தேதியை இப்போதைக்கு அறிவிக்க வேண்டாம், டைரக்டர் சிறுத்தை சிவாவுக்கு ஆர்டர் போட்ட...

கங்குவா படம் ரிலீஸ் தேதியை இப்போதைக்கு அறிவிக்க வேண்டாம், டைரக்டர் சிறுத்தை சிவாவுக்கு ஆர்டர் போட்ட நடிகர் சூர்யா – இப்படி ஒரு வில்லங்கம் இதுல இருக்கா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா உருவாக்கத்தில் உருவான படம் கங்குவா. இந்த படம் வரலாற்று பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட ஒரு கோணத்தில் எடுக்கப்பட்டமாக படமாகவும் கூறப்படுகிறது. இந்த படம் பல விருதுகளை பெறும் வகையில் தரம் மிக்கதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீப காலமாக, தமிழ் சினிமா பான் இந்தியா என்ற விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது. கேஜிஎப், பாகுபலி, ஆர்ஆர்ஆர், காந்தாரா, விக்ரம், ஜெயிலர், லியோ, ஜவான், பதான், சலார் என படங்களின் தரமும், அதற்கான விஸ்தரிப்பும் வேறுவிதமாக சென்றுக்கொண்டு இருக்கிறது. படத்தின் கதைகளின் ஜானரே பிரமாண்டத்தை கொண்டதாக மாறியிருக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில், தமிழில் இதுவரை பல படங்களில் நடித்த சூர்யாவுக்கு ஏழாம் அறிவு ஒரு வித்யாசமான கதைக்களமாக அமைந்தது. குறிப்பாக அதில், போதி தர்மராக சூர்யா நடித்த காட்சிகளும், மருத்துவ சிகிச்சை முறைகளை சீன மக்களுக்கு அவர் கற்பிக்கும் காட்சிகளும் படத்தில் வேறுவிதமாக இருந்தது.

அதற்கு பின் சூர்யா நடித்த படங்களில், வழக்கமான மசாலா கதைகளையே காண முடிந்தது. இதில் மிகவும் வித்யாசபட்டு நின்ற படமாக சூரரைப்போற்று அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், படத்தின் கதை அமைப்பும் சூர்யாவுக்கு நடிப்பதற்கான அதிக வாய்ப்பை தந்தன. இப்போது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் சூர்யா, இன்னும் தன் ஸ்திரத்தன்மையை கலையில் நிரூபிக்க விரும்புகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சிறுத்தை இயக்கத்தில் தற்போது வெளிவர உள்ள படம் கங்குவா. அந்த படத்தில் வித்யாசமான கதைக்களத்தில், சூர்யா நடித்திருக்கிறார். மற்ற படங்களை போலவே இந்த படங்களிலும் விஎப்எக்ஸ் தொழில்நுட்பங்களும், டீஏஜிங் தொழில் நுட்பங்களும் இருக்கும் எனத் தெரிகிறது. கலை அமைப்பில் இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இப்போது ரப் காப்பியாக கங்குவா படத்தை பார்த்த நடிகர் சூர்யா, மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார். அவர் எதிர்பார்த்ததை விட படம் பலமடங்கு திருப்தியாக வந்துள்ளது. ஆனால் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளில் அவ்வளவு திருப்தியில்லை.எனவே அந்த பணிகளை ரீ ஒர்க் செய்து, பிரஷ்ஷாக செய்யுங்கள். அந்த ரீ ஒர்க் பணி முடியும்வரை படம் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா. அதனால் படம் ரிலீஸ் இன்னும் சில வாரங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்