- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா? போடு வெடிய… கேட்கும்...

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா? போடு வெடிய… கேட்கும் போது மெய் சிலிர்க்குதே…

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த படத்துக்கு பிறகு சூர்யா, கார்த்திக் சுப்பராஜா இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்தார்.

ரெட்ரோ என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்த படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

கோவை சென்னை ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது பெருங்களத்தூர் என்ற பகுதியில் பிரமாண்டமான ஷெட் அமைக்கப்பட்டு நடிகர் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிகிறது.

நடிகர் விஜய் தி கோட் படத்தில் நடித்த பிறகு, இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அவரை நேரில் சந்தித்து கதை சொன்னார். இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்திருப்பதாக கூறிய விஜய், இந்த கதையில் நான் நடிப்பதை விட மற்ற நடிகர் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி மறுத்துவிட்டார்.

அப்படி விஜய் நடிக்க மறுத்த கதையில்தான் தற்போது சூர்யா நடித்து வருகிறார். இந்த படம் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் மற்றொரு கதையாக உள்ளது. மூக்குத்தி அம்மன் கதையில் நயன்தாரா நடித்தது போல் ஒரு ஆண் நடித்திருந்தால் அதற்கேற்ப ஒரு பக்தி படமாக இந்த கதை இருக்கிறது.

தற்போது வெளியான புதிய தகவலின்படி இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். அதே போல் இந்த படத்தில் அய்யனார் சாமியாகவும் அவர் நடிக்கிறார். பெருங்களத்தூரில் அய்யனார் கோவில் ஷெட் அமைத்துதான் சூர்யா அய்யனராக நடிக்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்