- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போவதற்கு இதுதான் காரணம்... முதல்முறையாக விவரத்தை வெளியிட்ட வெற்றிமாறன்....

வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போவதற்கு இதுதான் காரணம்… முதல்முறையாக விவரத்தை வெளியிட்ட வெற்றிமாறன்….

- Advertisement -

அசுரன் திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக மீண்டும் தயாரிப்பாளர் கலைபுலி தாணுடன் இணைவதாக இருந்தது. சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் குறுநாவலை மையமாக வைத்துதான், அடுத்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். இதற்கும் வாடிவாசல் என்றே தலைப்பிடப்பட்டது. சூர்யா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட் போட்டு அதற்கான டெஸ்ட் ஷூட்டிங் நடத்தினார்கள். படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை அமீரும் ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

படத்திற்கு வி எஃப் எக்ஸ் காட்சிகள் அதிகம் தேவைப்பட்டதால், வெளிநாட்டில் இதற்கான பணிகள் நடைபெற்றன. இதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டதால், சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவருமே தங்களது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதில் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கச் சென்று விட்டார்.

இது இரண்டு பாகங்களாக வளர்ந்தது. சூர்யாவும், எதற்கும் துணிந்தவன், கங்குவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதன் நடுவே வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக பலரும் கூறி வந்த நிலையில், நிச்சயம் அந்த திரைப்படம் நடக்கும் என்று தாணு மட்டும் அடிக்கடி நம்பிக்கை தெரிவித்து வந்தார். அதனால் இந்த முறை சூர்யா வெற்றிமாறன் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அது நடக்கவில்லை. சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். இதே போல் வெற்றிமாறனும் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதற்கான பணியில் ஈடுபட கவனம் செலுத்தி வருகிறார். இதனை கலைப்புலி தாணுவே தயாரிக்கிறார். இப்படியான சூழலில்தான் வாடிவாசல் திரைப்படம் குறித்து வெற்றிமாறன் விளக்கி இருக்கிறார்.

அதில், வாடிவாசல் திரைப்படத்திற்கான கதையை எழுதுவதில் தாமதம் நிலவுகிறது. நடிகர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு கருதியும் தொழில்நுட்ப ரீதியாகவும் எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்பதால், அடுத்த திரைப்படம் குறித்து முடிவு செய்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்