- Advertisement -
Homeபொழுதுபோக்குதயவு செய்து நீங்க அதை செய்யாதீங்க, நான் அதை சுத்தமாக விரும்பவில்லை - ரசிகர்கள் மத்தியில்...

தயவு செய்து நீங்க அதை செய்யாதீங்க, நான் அதை சுத்தமாக விரும்பவில்லை – ரசிகர்கள் மத்தியில் நேரடியாக பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் விஜயுடன் அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். 1999ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. நடிகர் விஜயுடன் இணைந்து இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார்.

அடுத்து நடிகை ஜோதிகாவுடன் சூர்யா நடித்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்த படத்தையும் இயக்குனர் வசந்த் இயக்கி இருந்தார். அதன்பிறகு இயக்குனர் அமீரின் மௌனம் பேசியதே சூர்யாவுக்கு நல்ல அடையாளத்தை தந்தது. பிறகு பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அதன்பிறகு காக்க காக்க பிதாமகன் பேரழகன் வாரணம் ஆயிரம் மாயாவி கஜினி ஆயுத எழுத்து அயன் ஆதவன் சிங்கம் வேல் போன்ற பல படங்கள் சூர்யாவுக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வரச் செய்தது.

துவக்கத்தில் கேமரா முன்பு சரியாக நிற்கத் தெரியாமல் வசனம் பேசத் தெரியாமல் குறிப்பாக நடனம் ஆடத் தெரியாமல் தடுமாறிய நடிகர் சூர்யா, பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறி தன்னை நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதை நிரூபித்து காட்டினார். இப்போது சூர்யா ஒரு டெடிகேடிவ் நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் பல ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் நாளை மறுதினம் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சூர்யா பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது, எனது சகோதரர்கள் பலரும் என்னுடைய பெயரை உங்கள் கைகளில் டாட்டூ போட்டு இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. நீங்கள் ஏற்கனவே என் வாழ்நாளுக்கு தேவையான அன்பை கொடுத்து இருக்கீங்க. அதனால் நீங்கள் இதுபோல் டாட்டூ போடுவதை நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக நீங்கள் எல்லோரும் உங்கள் வாழ்க்கையில் விரும்புவதை செய்து வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என நடிகர் சூர்யா அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்