சினிமாவை பொருத்த வரை வெற்றி படங்களை தொடர்ந்து தருபவர் மட்டுமே பீல்டில் நிலைத்து நிற்க முடியும். இதுவரை 15 படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் கடைசியாக 2 தோல்வி படங்களை தான் தந்தார். இப்போது அவரை கண்டுகொள்ள ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறி இருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 15 படங்களில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் 2 படங்களை தவிர மற்ற எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றவை. ஆனால் கடைசியாக அவரது 2 படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதே நேரத்தில் ஷங்கர் போன்ற கிரியேடிவ் நிறைந்த இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மிக குறைவு என்பதும் மறுக்க முடியாதது.
மிகப்பெரிய இயக்குனராக உள்ள ஷங்கர் இந்தியன் 2 இந்தியன் 3 படங்களை ஒரே நேரத்தில் இயக்கியதால்தான் அவரால் சரியாக திரைக்கதையில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்தியன் 2 படத்தின் கதை திரைக்கதை சொதப்பியதற்கு காரணம் அதுதான் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படமும் ஷங்கருக்கு வெற்றியை தரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஒரு மேசேஜ் அனுப்பி இருக்கிறார். உங்களோடு பேச வேண்டும். எப்போது பேசலாம் என்று கேட்டிருக்கிறார். நீங்கள் சரியான டைம் சொன்னால் அந்த நேரத்தில் கால் செய்கிறேன் என்பது போன்று அவருக்கு அந்த மேசேஜில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு நடிகர் அஜீத்குமாரிடம் இருந்து இந்த நிமிடம் வரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் மிகவும் பிஸியாக இருப்பதால் இயக்குனர் ஷங்கருக்கு ரிப்ளை அனுப்பாமல் இருக்கிறாரா, அல்லது இவர் சமீபத்தில்தான் இரண்டு பிளாப் படங்களை தந்திருக்கிறார். அதனால் இவருடன் ஏன் பேச வேண்டும் என்று தவிர்க்கிறாரா என்று தெரியவில்லை.
ஏனெனில் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 2 படங்கள் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என 2 படங்களுமே சரியாக போகவில்லை. இதை விட மிக மோசமான தோல்வி படங்கள் என்றுதான் பகிரங்கமாக சொல்ல வேண்டும். அதனால்தான் ஷங்கருடன் எதற்கு பேச வேண்டும் என தவிர்க்கிறாரா எனத் தெரியவில்லை. அதே நேரத்தில் தனது அடுத்த படமான வேள்பாரி படத்தில் அஜீத்குமாரை நடிக்க வைக்க ஷங்கர் அழைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,





