- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் தம்பி மாதிரி அந்த கேரக்டர்ல என்னால நடிக்க முடியாது, நான் சிறந்த நடிகன் கிடையாது...

என் தம்பி மாதிரி அந்த கேரக்டர்ல என்னால நடிக்க முடியாது, நான் சிறந்த நடிகன் கிடையாது – ஆதங்கப்பட்டு பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் அவரது சில படங்கள் பெரிய கவனம் பெறவில்லை. ஆனால் இயக்குனர் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே படமும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படமும் ஒரு நாயகனுக்குரிய அடையாளத்தை பெற்றுத் தந்தன.

தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படமும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படமும் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தன. அதன்பிறகு ஒரு காதல் நாயகனாக, அதிரடி ஹீரோவாக சூர்யா பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்த சிங்கம் சிங்கம் 2 வேல் ஏழாம் அறிவு வாரணம் ஆயிரம் சில்லுனு ஒரு காதல் என பல படங்கள் மாஸ் ஹிட்டாக இருந்தன. ஆனால் சமீபமாக அவரது படங்கள் வசூலில் திருப்தியளித்தாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களை திருப்தி செய்வதில்லை. கங்குவா படத்துக்கு பிறகு ரெட்ரோ படமும் ரூ. 70 கோடி வசூலித்தாலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, நான் சிறந்த நடிகர் எல்லாம் கிடையாது. நான் ஒரு ஓவர் ஆக்டிங் ஆக்டர் என்று எல்லோரும் சொல்லுவாங்க. ஆனால் நான் பாலா அண்ணன் சொன்னதுதான் செஞ்சிட்டு இருக்கேன். அவர் கேமரா முன்னாடி உண்மையா இருந்திடுடா என்று சொல்வார்.

- Advertisement -

ஏதாச்சும் ஒரு சீன்ல நீ எமோஷனலா விலகி இருந்து நான் அடுத்த டேக் போகலாம் என்று சொன்னா கூட என்னை கூப்பிட்டு, நீ சொன்னா நான் சந்தோஷப்படுவேன் என்று சொல்வார். அதனால் நான் என்னுடைய பெஸ்ட் தான் எப்போதும் கொடுப்பேன்.

சில விஷயங்கள் என்னால பண்ண முடியாது. மெய்யழகன் மாதிரி படங்களில் என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது. சிலதெல்லாம் நான் கையை தூக்கி என்னால் முடியாது என்று ஒத்துக்குவேன் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார். வழக்கமாக ஜோதிகாவைதான் ஓவர் ஆக்டிங் என்று சொல்வாங்க. மாயாவி படத்துல சூர்யாவே ஜோதிகாவிடம் அப்படி சொல்லுவார். இப்ப சூர்யாவே அப்படி சொல்றாரே என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்