- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தின் படுதோல்வி; வசமாக சிக்கிய மலையாள நடிகர்கள் மோகன்லால் பிருத்விராஜ் - அதிரடியாக அவர்கள்...

விடாமுயற்சி படத்தின் படுதோல்வி; வசமாக சிக்கிய மலையாள நடிகர்கள் மோகன்லால் பிருத்விராஜ் – அதிரடியாக அவர்கள் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் விடாமுயற்சி. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பிளாப் ஆனது. ஸ்டார் நடிகரான அஜீத்குமாரை மாஸ் ஹீரோவாக படத்தில் காட்டாமல் டம்மி கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டதாக ஏகே ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதுவரை 140 கோடி ரூபாய் மட்டுமே இந்த படம் வசூலித்துள்ளது.

விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், மலையாளத்தில் லூசிபர் படத்தின் 2ம் பாகத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் பிருத்விராஜ் டைரக்ட் செய்கிறார். படத்தில் நாயகனாக மோகன்லால் நடிக்கிறார்.

லூசிபர் 2 படத்தை லைகா நிறுவனம் ரூ. 175 கோடி பட்ஜெட் தயாரித்து வருகிறது. இது மலையாள படத்தில் அதிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகவும் உள்ளது. ஹீரோ மோகன்லால் சம்பளம் ரூ. 15 கோடி, இயக்குனர் பிருத்வி ராஜ் சம்பளம் ரூ. 10 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் இதுவரை ரூ. 100 கோடி வரை செலவு செய்து படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கிடையே அஜீத்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸான பிறகு, லூசிபர் 2 படத்தின் தயாரிப்பு செலவுக்கான ரூ. 75 கோடியை அதில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என கணக்குப்போட்ட லைகா நிறுவனத்துக்கு சம்மட்டி அடியாக விடாமுயற்சி படம் பலத்த தோல்வியை தந்துவிட்டது. அதனால் மேலும் ரூ. 75 கோடியை லூசிபர் 2 பட தயாரிப்புக்கு ஒதுக்க முடியவில்லை என லைகா தயாரிப்பு நிறுவனம் கைவிரித்து விட்டது.

இப்படி திடீரென லூசிபர் 2 படத்தை தயாரிக்க முடியாத சிக்கல் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்டதை அடுத்து, நடிகர் மோகன்லாலும் இயக்குனர் பிருத்விராஜூம் தங்களது சம்பளம் ரூ. 25 கோடியை விட்டுத் தந்தனர். மீதி ரூ. 50 கோடிக்கு அமேசான் பிரைம் ஓடிடி மூலம் வியாபாரம் பேசி அந்த தொகையை கொண்டு அந்த படத்தை முழுமையாக எடுத்து முடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதனால் திட்டமிட்டபடி வருகிற மார்ச் 27ம் தேதி லூசிபர் படத்தின் 2ம் பாகமான எம்புரான் படம் திரைக்கு வருகிறது. விடாமுயற்சி படத்தின் தோல்வியால், லைகா தயாரிப்பு நிறுவனம் கைவிட்ட போதும் ஒரு இயக்குனராக, ஒரு ஹீரோவாக பிருத்விராஜூம், மோகன்லாலும் அதிரடியாக செயல்பட்டு தங்களது படத்தை எடுத்து முடிக்க முன்வந்தது பெரிய பாராட்டை அவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது.

சற்று முன்