- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ரோ படத்திற்காக அந்த தப்பான விஷயத்தை நான் செய்தேன், ஆனால் அதை நான் ஆதரிக்க மாட்டேன்...

ரெட்ரோ படத்திற்காக அந்த தப்பான விஷயத்தை நான் செய்தேன், ஆனால் அதை நான் ஆதரிக்க மாட்டேன் – மேடையில் ஓபனாக பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் சூர்யாவின் 2டி நிறுவனம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றன.

கடந்த பல ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்களை தராத நிலையில் சூர்யாவுக்கு ரெட்ரோ படம் பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆக்சன் கதையாக இருந்தாலும் முழுக்க முழுக்க காதல் உணர்வுகளை சொல்லும் கதை என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார். அதனால் படம் வேற லெவலில் இருக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பீட்சா ஜிகர்தண்டா பேட்ட இறைவி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை போல் இல்லாமல் ரெட்ரோ படம் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை பொருத்த வரை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

புரட்சித் தலைவர் நடிகர் எம்ஜிஆர் தனது படங்களில் சிகரட் பிடிப்பது போலவோ மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அதை அவரது தீவிர ரசிகரான நடிகர் ராமராஜனும் தனது படங்களில் பின்பற்றினார். அதே போல் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் தனது படங்களில் பெண்களை தொட்டு நடிக்க மாட்டார்.

- Advertisement -

ஆனால் மற்ற நடிகர்கள் எல்லாம் இதுபோன்ற காட்சிகளில் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்திருக்கின்றனர். சினிமாவில் புகை பிடிப்பது மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகளில் நடிகரகள் நடிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது கண்டுக்கொள்ளப்படவில்லை. இப்போது ரெட்ரோ படத்திலும் சூர்யா சிகரட் புகைப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இருக்கின்றன.

சமீபத்தில் நடந்த ரெட்ரோ படத்தில் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா பேசியதாவது, இந்த படத்திற்காக நான் பல காட்சிகளில் சிகரெட் அடித்தேன். தயவு செய்து உங்கள் வாழ்க்கையில் சிகரெட் அடிக்காதீர்கள். சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டால் விடவே முடியாது. ஒண்ணுதானே, ஒரு பஃப் தானே என்று நினைப்பீர்கள். ஆனால் சிகரெட் பிடித்தால் பிறகு விடவே முடியாது. நான் அதை எப்போதும் ஆதரிக்க மாட்டேன் என்று சூர்யா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்