- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனருடன் கைகோர்த்த சூர்யா... யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான அறிவிப்பு... நடிகரின் ஸ்மார்ட் மூவ்...

பிரபல இயக்குனருடன் கைகோர்த்த சூர்யா… யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான அறிவிப்பு… நடிகரின் ஸ்மார்ட் மூவ்…

- Advertisement -

சூர்யா சமீபத்தில் கங்குவா படத்தில் நடித்த முடித்திருக்கிறார். சூர்யாவின் திரையுலக பயணத்திலேயே மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சூர்யா கடும் உழைப்பை காட்டி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் திஷா பதானி கதாநாயகி யார் நடிக்கிறார். பாபி தியோல், நட்டி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் வில்லன்களாக நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

- Advertisement -

முந்தைய ஜென்மத்திற்கும், இப்போது இருக்கும் உண்டான தொடர்பை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. போன ஜென்மத்தில் நிறைவேறாத ஆசையை இந்த ஜென்மத்தில் உள்ளவர் அதனை கையில் எடுத்து செய்வதுதான் படத்தின் உள்ளே அமைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இதன் டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தின் சூட்டிங்கிற்கு செல்லாமல் தள்ளாடி வருகிறார் நடிகர் சூர்யா. தனது 43-வது திரைப்படத்தில் சுதா கொங்கராவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது வரை அதற்கான சூட்டிங் மட்டும் நடைபெறவே இல்லை. இதனால் படம் தடைப்பட்டு விட்டதாக பலரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கையும் தொடங்குவதில் தாமதம் இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த திரைப்படத்தை வெகு விரைவாக முடிக்க வேண்டும் என்று சூர்யா எண்ணியதாக தகவல்கள் வெளியாகின. அவர் அயலான் திரைப்பட இயக்குனர் ரவிக்குமாருடன் இணைவார் என்று கூறப்பட்டது. இப்படியான சூழலில் அவரது 44-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரும் வெளியாகி இருக்கும் நிலையில் அதில், love laughter war என குறிப்பிடப்பட்டுள்ளது. பேட்டை திரைப்படத்தின் படப்பிடிப்பை வெறும் 65 நாட்களில் கார்த்திக் சுப்புராஜ் முடித்ததால், இந்த திரைப்படமும் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்