தமிழ் சினிமா நடிகர்களில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி துவக்கத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்து, பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பீட்சா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். காதலும் கடந்து போகும், கருப்பன், சேதுபதி, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி ஹீரோ நடிகராக மாறினார்.
அடுத்து பேட்ட, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களில் ரஜினி, கமல், விஜய்க்கு வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றார். இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்த அசத்தினர். இப்போது வில்லன் கேரக்டரில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு விஜய் சேதுபதி வந்துவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதிக்கு வெற்றி படங்கள் இல்லாத நிலையில், அவரது 50வது பட மகாராஜா, மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. குரங்கு பொம்மை டைரக்டர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியும் தற்போது நடிகராகிவிட்டார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய முதல் படம் பீனிக்ஸ் விழான். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஜய் சேதுபதி போலவே அவரது மகனும் சினிமாவில் முன்னணி நடிகராக மாறுவாரா என்பது அடுத்தடுத்து அவர் நடிக்க போகும் படங்கள்தான் அதை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா விஜய் சேதுபதி, நான் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். மற்றவர்கள் போல வாரிசு நடிகராக இந்த இடத்தை எளிதாக நான் அடையவில்லை. என்னுடைய அப்பா தினமும் என்னுடைய செலவுக்கு என 500 ரூபாய் தான் தருவார், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நான் வளர்ந்தேன். அதற்குபிறகுதான் ஒரு முன்னணி நடிகராக வேண்டும் என்ற ஒரு முடிவில் இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். விஜய் சேதுபதி தினமும் 500 ரூபாய் செலவுக்கு குறைவாக தந்ததாக சுட்டி காட்டி விஜய் சேதுபதி மகன் சூர்யா பேசியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





