- Advertisement -
Homeபொழுதுபோக்குதினமும் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு விஜய் இலவசமாக தங்க மோதிரம் கொடுப்பாரா? - விளாசித் தள்ளிய...

தினமும் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு விஜய் இலவசமாக தங்க மோதிரம் கொடுப்பாரா? – விளாசித் தள்ளிய நடிகர் எஸ்வி சேகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1980 90களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் எஸ்வி சேகர். குறிப்பாக விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் முதன்மை கேரக்டரில் நடித்தவர். நாடகப்பிரியா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை எஸ்வி சேகர் அரங்கேற்றம் செய்தவர்.

சமீபகாலமாக நடிகர் எஸ்வி சேகர் திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். மேலும் அவரது அப்பா வெங்கட்ராமன் பெயரை சென்னையில் உள்ள சாலைக்கு வைத்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். மேலும் திமுகவை எதிர்க்கும் தவெக தலைவர் விஜய் குறித்து எஸ்வி சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, அரசியல் கட்சியை ஆரம்பித்த சமயத்தில் இலவசம் வாங்க கூடாது இலவசம் கொடுக்கக் கூடாது என்று சினிமா வசனங்கள் பேசிய விஜய் இப்போது குழந்தை பிறந்தால் தங்க மோதிரம் கொடுப்பதாக கூறுகிறார். ஒரு நாளைக்கு 2000 குழந்தைகள் பிறக்கின்றன. அதற்கு சனி ஞாயிறு என்று விடுமுறை கூட கிடையாது.

அப்படி பார்த்தால் வருடத்தில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் தமிழ்நாட்டில் பிறக்கின்றன? அத்தனை குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் கொடுப்பாரா? விஜய் வாய்க்கு வந்தது எல்லாம் பேசுகிறார். உச்சகட்டமாக உளறுகிறார். விஜயால் பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன.ஆனால் அவர் வளைகாப்புக்கு செல்கிறார். அவர் என்னுடைய நண்பரின் மகன்தான்.

ஆனாலும் அவருக்கு அரசியல் தெரியவில்லை. எந்த வீட்டில் அப்பா அம்மா காசுல பொறுப்பில்லாமல் சுத்துறாங்களோ அவங்க அத்தனை பேரும் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இருக்கின்றனர். மத்த கட்சிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டவர்கள்தான் விஜய் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்று பேசியிருக்கிறார்.

நடிகர் விஜய் குறித்து நடிகர் எஸ்வி சேகர் தொடர்ந்து கடும் விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு தவெக கட்சி தரப்பில் இருந்தும் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்விமர்சனங்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன. எனினும் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து நடிகர் எஸ்வி சேகர் ஏளனமாக பேசி விமர்சிப்பதை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்