- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சியில் விஜய்க்கும் தொண்டர்களுக்கும் உள்ள உறவை செக்போஸ்ட் போல நின்று தடுப்பது அவர்தான் -...

தவெக கட்சியில் விஜய்க்கும் தொண்டர்களுக்கும் உள்ள உறவை செக்போஸ்ட் போல நின்று தடுப்பது அவர்தான் – நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் தாடி பாலாஜி. நடிகர் விஜயுடன் நிலாவே வா சச்சின் துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள அவர், சமீபத்தில் நெஞ்சில் விஜய் உருவத்தை பச்சை குத்தி இணையத்தில் வைரலானார்.

இப்போது நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தவெக கட்சி செயல்பாடுகள் குறித்து விமர்சித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் நடிகர் தாடி பாலாஜி கூறியதாவது, விஜய் நடித்த நிலாவே படத்தில் தான் நான் அறிமுகமானேன். 12 படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் நடிகர் விஜய் என்னுடன் நெருக்கமாக நட்பாக பழகியிருக்கிறார்.

- Advertisement -

விஜயும் நானும் படத்தில் நடித்த போது நண்பர்களாக இருந்தோம். இப்போது அவர் அரசியல் இயக்கம் ஆரம்பித்து தலைவரான பிறகு, நான் தொண்டராக மாறி இருக்கிறேன். விஜய் நடிகராக இருந்து இப்போது மக்களின் தலைவராக மாறியிருக்கிறார். இதை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நீண்டகாலமாக விஜயுடன் பயணிக்கும் அவர், தன்னை தாண்டி யாரும் விஜயை நெருங்கி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கட்சியின் தொண்டன் தன் தலைவனிடம் குறைகளை சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சியின் நிலை என்ன, தொண்டனின் மனநிலை என்ன என்று தலைவனுக்கு தெரிய வரும். அரசியல் ஆளுமை நிறைந்த ஆதவ் அர்ஜூனா மட்டுமே விஜயை நெருங்க முடிகிறது. சாதாரண தொண்டர்களால் விஜயை பார்க்க முடியவில்லை.

- Advertisement -

விஜய்க்கு ரசிகர்களை இருப்பவர்களை கட்சிக்கு தொண்டர்களாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் தியேட்டரில் விசில் அடித்துவிட்டு மட்டும் சென்று விடுவார்கள். ரசிகர்களிடம் அரசியலை கொண்டு செல்லாமல் இருக்கின்றனர். ரசிகர்கள் தொண்டர்களாக மாறினால்தான் அரசியல் இயக்கத்தில் விஜயுடன் இணைந்து பயணிப்பார்கள். அதை செய்யாமல் புஸ்லி ஆனந்த் இருந்து வருகிறார்.

நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. புஸ்லி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்னிடம் இருக்கிறது. அது நான் விஜயின் நண்பராக இருக்கிறேன். ஆனால் நான் அவரை இப்போது தலைவராக பார்க்கிறேன். கட்சியின் தொண்டனாக இருக்கிறேன். ஆனால் புதுச்சேரி செக்போஸ்ட் போல புஸ்லி ஆனந்த் விஜய்க்கு குறுக்கே நின்றுக் கொண்டிருக்கிறார் என்று அந்த நேர்காணலில் நடிகர் தாடி பாலாஜி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்