நடிகர் அஜீத்குமார் ஆரம்பத்தில் மோட்டார் பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் அப்படி ஒரு பைக் ரேஸில் கலந்துக்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு முதுகு தண்டுவட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஒன்றரை ஆண்டுகள் படுக்கையில் இருந்தார்.
இதனால் படப்பிடிப்பில் கூட அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாத பிரச்னை இருந்தது. இருப்பினும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு அவள் வருவாளா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் அஜீத்குமார் நடித்தார். இப்போது பைக் ரேஸை குறைத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் அவர் கார் ரேஸூக்கு அதிக முக்கியவம் தருகிறார். துணிவு படத்துக்கு பிறகு அவர் 2023ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடித்த 2 படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகின. இதில் குட்பேட் அக்லி படம் நல்ல வெற்றியை பெற்றது.
அதன்பிறகு அவர் தனது 64வது படத்தை இயக்கும் வாய்ப்பை குட்பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அளித்தார். ஆனால் 2026ம் ஆண்டு முழுவதும் கார் ரேஸில் அஜீத்குமார் இருந்ததால் அந்த படம் ஷூட்டிங் துவங்கவே இல்லை. இப்போது 2027ம் ஆண்டு ஜனவரி வரை மீண்டும் அஜீத்குமார் கார் ரேஸில் கவனம் செலுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி இந்த ஆண்டு முழுவதும் அவர் கார் ரேஸூக்கு செல்வதால் இனி சினிமாவில் அவர் நடிப்பதற்கான ஆர்வம் இல்லை என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஏனெனில் அஜீத்குமார் விஜய் இருவரும்தான் தமிழ் சினிமாவில் கடும் போட்டியாளர்களாக கருதப்பட்டனர். ஒருவர் படம் வெளியாகும்போது மற்றவர் படம் அதற்கு போட்டியாக இருந்தது.
ஆனால் விஜய் இப்போது அரசியலுக்கு போய் விட்டார். மேலும் ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்து விட்டார். இதனால் போட்டியாளர் இல்லாத களத்தில் நடிகர் அஜீத்குமார் படங்களுக்கு வணிக ரீதியான வரவேற்பும் ஆதரவும் இல்லாததால் யாரும் அவரை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை. அதனால் இனி விஜய் போலவே அஜீத்குமாரும் சினிமாவுக்கு குட்பை சொல்லி விடுவார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.





