- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய் கூறியதாவது, சினிமாவுக்குள் வந்து 35 வருடங்கள் ஆகிவிட்டது. ஆக்டிங் என்றால் என்ன? உங்களுடைய செருப்பை நான் போட்டுக் கொண்டு நடந்தால் எங்கே அது உங்களை கடிக்கிறதோ அந்த வலியை நான் புரிந்து கொண்டு வெளிப்படுத்த வேண்டும். இதுதான் நடிப்பு. என்னை மாதிரி எதிர்பார்ப்போடு வந்தவனுக்கு இங்கே இத்தனை வருடங்களாகியும் தீனி கிடைக்கவில்லை என்பதே உண்மை. வந்து கொண்டே இருக்கும்போது சில கேரக்டர்கள் கிடைக்கும் இல்லையா? அதற்காக நம்பிக்கையை விடாமல் இந்த சினிமாவில் பிரியத்தோடு இருக்கிறேன் என்று நடிகர் தலைவாசல் விஜய் கூறியிருக்கிறார்.





