- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தலைவாசல் விஜய் கூறியதாவது, இன்றைக்கு டிசி படத்தில் அரசு கேரக்டர் வரைக்கும் வந்துட்டேன். ரிசார்ட் செஃப் நெடுமாறன் சார் என்றுதான் கல்யாண வீடுகளில் இருந்து ஏர்போர்ட் வரைக்கும் என்னை கூப்பிடுகிறார்கள். திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டோம். நான் நாசர் எல்லாம் இங்கே வரும்போது எங்களை கை தூக்கி விட யாருமே இல்லை. நான் நாசர் ஜிஎஸ் சுந்தர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவோம். யாருக்கும் சினிமா பின்னணி கிடையாது. காலையில் 2 டைரக்டர்கள் மாலையில் 2 டைரக்டர்கள் என்று போய் பார்த்து வாய்ப்பு கேட்போம் என்று நடிகர் தலைவாசல் விஜய் கூறியிருக்கிறார்.





