- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு ரஜினியை போலவே மற்றொரு நடிகரையும் ரொம்ப பிடிக்கும்; பிரபல நடிகர் வெளிப்படையாக சொன்ன...

நடிகர் விஜய்க்கு ரஜினியை போலவே மற்றொரு நடிகரையும் ரொம்ப பிடிக்கும்; பிரபல நடிகர் வெளிப்படையாக சொன்ன தகவல் – அட அவர் சொல்றது நூறு சதவீதம் உண்மைதானா…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தமிழக அரசியலில் முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார்.

நடிகர் விஜய், சினிமாவில் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பை, ரசிகர்கள் ஆதரவை நம்பி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அதே நேரத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலும் தனக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்பிருப்பதாக அவர் கருதுகிறார். ஏனெனில் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுக, அதிமுக ஆட்சிகள் குறித்து மக்கள் மத்தியில் பெரிய சலிப்பான மனநிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இடையே நிலவும் மோதல், திமுகவில் தொடரும் வாரிசு அரசியல், திமுக அதிமுக ஆட்சிக் காலத்தில் வளம் அடையும் அந்தந்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், பிரதிநிதிகள், விலைவாசியை கூட கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், அடுத்த முதல்வர் உதயநிதி என்ற கோஷம் போன்றவை தமிழக மக்களுக்கு அயர்ச்சியை, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் விஜய் வருகை, தமிழக அரசியல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வருகிற 2026 சட்டசபை தேர்தலில் விஜயுடன், நாம் தமிழர் கட்சி சீமானும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால் நிச்சயமாக விஜய்க்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பு அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் இப்போதே கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவரது அண்ணாமலை வசனத்தை பேசி காட்டித்தான், அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் சினிமாவில் நடிக்கும் ஆசையை கூறி, சம்மதம் வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட விஜய்க்கு, ரஜினியை போலவே மற்றொரு நடிகரும் மிகவும் பிடித்தமானவர் என்று நடிகர் தாமு நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். காமெடி நடிகர் தாமு விஜயுடன் கில்லி, காதலுக்கு மரியாதை, லவ்டுடே, நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து தாமு ஒருமுறை கூறுகையில், நடிகர் விஜய்க்கு அஜீத்குமாரை ரொம்ப பிடிக்கும். அவரது நடிப்பை மிகவும் ரசித்து பார்ப்பார். பில்லா படம் வெளியான போது, பில்லா படத்தின் தீம் மியூசிக்கை பல மாதங்கள், தன்னுடைய மொபைல் போன் டயல் டோனாக விஜய் வைத்திருந்தார் என்று தாமு கூறியிருக்கிறார். விஜய், அஜீத் இருவரும் சினிமாவில் கடும் போட்டியாளர்களாக கருதப்படும் நிலையில், நடிகர் தாமு கூறியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்