- Advertisement -
Homeபொழுதுபோக்குஅற்ப காரணத்திற்காக விஜயகாந்தை எதிர்த்தாரா வடிவேலு... இறுதி அஞ்சலி செலுத்த கூட வரவில்லையே...

அற்ப காரணத்திற்காக விஜயகாந்தை எதிர்த்தாரா வடிவேலு… இறுதி அஞ்சலி செலுத்த கூட வரவில்லையே…

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு வடிவேலுவை அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் தான். என் ராசாவின் மனசிலே திரைப்படத்திற்காக ஒரு கதாபாத்திரத்தை ராஜ்கிரண் அவருக்கு கொடுத்தார். அதில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு பாடலுக்கும் வடிவேலு தலையைக் காட்டி கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், தனது எடுப்பான நகைச்சுவையால் இன்று வைகைப் புயலாக மாறி இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில், விஜயகாந்துடன் பயணித்து வந்த வடிவேலு அவர்களுடன் பல படங்களில் நடித்து வந்தார். சின்ன கவுண்டர் திரைப்படத்திலும் விஜயகாந்த்திற்கு குடை பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. இந்த நிலையில் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலால், அவரைப் பொதுவெளியில் கடுமையாக வடிவேலு விமர்சிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

குறிப்பாக 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அப்போது திமுக சார்பில் பிரச்சாரம் செய்த வடிவேலு, செல்லும் இடங்களில் எல்லாம் விஜயகாந்தை வறுத்தெடுத்தார். அவரைப் பற்றி அநாகரிகமாகவும் பேசினார். கேப்டன் கேப்டன் என்று கூறுகிறீர்களே தோனி தான் என்று கேப்டன் என்றும் வடிவேலு வம்பு இழுத்தார். ஆனால் எந்த ஒரு பொது மேடையிலும், வடிவேலுவின் பேச்சுக்கு மறு கருத்து பேசவே இல்லை விஜயகாந்த்.

அந்தத் தேர்தலில் விஜயகாந்த், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். இந்த பக்கம் பட வாய்ப்புகள் இல்லாமல், பம்மிய வடிவேலு நீண்ட காலமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அவ்வப்போது அவர் நடித்து வந்து திரைப்படங்களும் படு தோல்வியை சந்தித்தன. இப்படியான சூழலில் தான் மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தில் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இதனிடையே விஜயகாந்த் உடன் கடைசிவரை மோதல் போக்கை ஏற்படுத்திய வடிவேலு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூட வரவில்லை. இதேபோல் தன்னுடன் பயணித்த போண்டாமணியின் மறைவுக்கும் வடிவேலு செல்லவில்லை. இந்த நிலையில் வடிவேலுவுக்கும் விஜயகாந்த் என்னதான் பிரச்சனை என்பதை தியாகு ஒரு வீடியோவில் கூறுகிறது தற்போது வைரலாகி வருகிறது.

250 ரூபாய் சம்பளத்திற்கு சின்ன கவுண்டரில் நடிக்க வந்தார் வடிவேலு. விஜயகாந்திற்கு குடைபிடித்தபடி செல்லும் வேடம். அவருக்கு புதிய துணிமணிகளை எடுத்து தந்தான் என் நண்பன் விஜயகாந்த். விஜயகாந்தின் வக்கீல் வீடும் வடிவேலுவின் வீடும் சாலிகிராமத்தில் எதிரெதிரே இருந்தது. விஜயகாந்தின் வக்கீல் ஒருநாள் இறந்து போக, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வடிவேலுவின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ளாத வடிவேலு அங்கு இருந்தவருடன் சண்டையில் ஈடுபட்டதால், களேபர சூழல் உருவானது. உடனே வடிவேலு எனக்கு போன் செய்து விஜயகாந்த் ஆட்கள் என்னிடம் வம்பு இழுக்கிறார்கள் என்று கூறினார். இந்த விஷயம் கருணாநிதி வரைக்கும் சென்றது. இதுதான் விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு திமுகவில் பிரச்சாரம் செய்ய காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்