நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அந்த நடிப்பில் கவர்ச்சி கலந்த நடிப்பை தந்திருந்தார்.
தொடர்ந்து தமிழில் டாப் ஸ்டார் நடிகர் விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவில்லை. எனினும் தெலுங்கில் நடித்துவரும் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் நுழைந்துவிட்டார்.
இந்தியிலும் ராஷ்மிகா சில படங்களில் நடித்து, பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று பிரபலமாகி விட்டார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பு விடப்படும் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், ராஷ்மிகா மந்தனாவும் காணப்பட்டார். நம்மூர் நயன்தாராவும் தனது கணவருடன் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் கருப்பு நிறத்தில் முண்டா பனியன், ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்த நிலையில், லிப்ட் ஒன்றில் நுழையும் ராஷ்மிகா மந்தனா குலுங்கு குலுங்கி சிரிப்பது போன்று ஆபாசமாக அந்த வீடியோ இருக்கிறது.
மிக ஆபாசமாக அந்த வீடியோவில் இருப்பது உண்மையில் ராஷ்மிகா மந்தனா அல்ல, என்பதும் ஏஐ தொழில்நுட்பத்தில் அது அவரைப் போல மாற்றப்பட்டுள்ளது எனவும், வேறொரு பெண் இருக்கிற உண்மையான வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.
இப்படி வீடியோ மார்பிங் மூலம், ராஷ்மிகா மந்தனா சித்தரிக்கப்பட்ட வீடியோ குறித்து பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால், என்னை மார்பிங் செய்திருப்பது எனக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த தொழில்நுட்பத்தில் இதுபோன்ற தவறான பயன்பாடு, இணையத்தில் உள்ள அனைவருக்குமே அச்சுறுத்தல்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





