மத்திய அரசின் 2022ம் ஆண்டுக்கான 70 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடனக் கலைஞர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகர் விருதை கன்னட நடிகர் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி ( காந்தாரா), சிறந்த நடிகை நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்) மானசி பரேக் ( கட்ச் எக்ஸ்பிரஸ்), சிறந்த தமிழ் படம் – பொன்னியின் செல்வன் 1, சிறந்த இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ( பொன்னியின் செல்வன் 1) சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் ( பொன்னியின் செல்வன்) சிறந்த சவுண்ட் டிசைன் – ஆனந்த கிருஷ்ணமூர்த்தி ( பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனக் கலைஞர் – ஜானி மாஸ்டர் ( திருச்சிற்றம்பலம்), சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா, சிறந்த சண்டை பயிற்சியாளர் – அன்பறிவ் ( காந்தாரா), சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2, சிறந்த கன்னட திரைப்படம் – கேஜிஎப் 2, சிறந்த மலையாளப்படம் – சவுதி வெள்ளைக்கா, சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகார்ஷி ( ஆட்டம் – மலையாளம்), சிறந்த பின்னணி பாடகி – பாம்பே ஜெயாஸ்ரீ ( சவுதி வெள்ளைக்கா – மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் – ஆர்ஜித் சிங் ( பிரம்மஸ்திரா – இந்தி) சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் ( மாளிகாபுரம் – மலையாளம்) என விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சவுண்ட் டிசைன் என 4 பிரிவுகளில், 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த முறை சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதை ஏஆர் ரகுமான் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் ஏஆர் ரகுமான் இசை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதுவும் உசுரே நீதானே நீதானே வேறு எதுவும் வேணாமே என்ற அவரது மேஜிக் குரலில் பாடி ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தார். ஏஆர் ரகுமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை இசை ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





