- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த கலகலப்பான சம்பவம்... உள்ளதைப் பகிர்ந்த நடிகர் வைபவ்... கேட்கவே...

கோட் திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த கலகலப்பான சம்பவம்… உள்ளதைப் பகிர்ந்த நடிகர் வைபவ்… கேட்கவே சுவாரசியமா இருக்கேப்பா…

- Advertisement -

லியோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு கோட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, Greatest Of All Time என்பதை சுருக்கியே கோட் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்காக ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. கதாநாயகிகளாக சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இதுபோக பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், வைபவ், அஜ்மல், யோகி பாபு, அரவிந்த் ஆகாஷ், இவானா உள்பட ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் டைம் மெஷின் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு எடுத்து வருவதாகவும் தெரிகிறது. அதாவது எதிர்காலத்தில் வாழும் விஜய் நடப்பு உலகத்திற்குள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி இதன் கதை எழுதப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இருப்பினும் வெங்கட் பிரபு என்ன மாதிரியான காட்சிகளை வைத்திருக்கிறாய் என்பது இப்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. சமீபத்தில் சென்னை போரூர் அருகே இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் அந்தப் படத்தில் நடித்திருக்கும் வைபவ், கோட் படத்தில் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவரிடம் கோட் தொடர்பான கதை கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, இரண்டு நாட்களுக்கு முன்பு சூட்டிங்கில் ஒரு காட்சி குறித்து விஜய் அண்ணா என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது வெங்கட் பிரபு சாரும், காட்சிகள் குறித்து விளக்க உங்களுக்கு மட்டும் தானே அண்ணா கதை தெரியும் என்று கூறினேன். என்னடா உனக்கு இன்னும் இந்த படத்தோட கதை தெரியாதா என்று பதிலுக்கு விஜய் அண்ணா என்னிடம் கேட்டார். இதை கவனித்த வெங்கட் பிரபு சார், டேய் கொஞ்ச நேரம் நீ சும்மா இருடா என்று கூறினார். வைபவ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்