- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பாக்கி பட வில்லன் நடிகர் இமயமலையில் செய்கிற அந்த விஷயம், ஊருக்குள்ள அப்படியே வந்துராதீங்க...

துப்பாக்கி பட வில்லன் நடிகர் இமயமலையில் செய்கிற அந்த விஷயம், ஊருக்குள்ள அப்படியே வந்துராதீங்க ப்ரோ – இது ஆன்மீகமா, வியாதியான்னு தெரியலையே

- Advertisement -

ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சத்குருக்களும் அடிக்கடி சென்றுவருகிற இடமாக இமயமலையாக உள்ளது. சிவன் வாழுகிற இடமாக கருதப்படும் இமயமலைக்கு செல்வது, மனிதர்களின் ஆன்மிக தேடலாக அமைகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னை உள்நோக்கி பார்க்க, தனது ஆன்மாவை உணரக்கூடிய இடங்களில் ஒன்றுதான் இமயமலை.

முதலில் இமயமலை குறித்து, தமிழக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் அடிக்கடி இமயமலை செல்வதாக வந்த தகவல்களால்தான் இமயமலை குறித்த ஒரு கேள்வி எழுந்தது. அங்கு சென்றால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் என்பதால் இப்போதெல்லாம் பலரும் ஆன்மிக பயணமாக இமயமலை, ரிஷிகேஷ் செல்வது அதிகரித்துள்ளது.

- Advertisement -

ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்கு மிக முக்கிய காரணம், தமிழ்நாடு உள்பட இந்தியாவில் எங்கு சென்றாலும் ரஜினியை அடையாளம் கண்டுக் கொள்கின்றனர். அவரால் தனிமனிதனாக பொது இடங்களில் நடமாடவே முடிவதில்லை. அவருக்கான தனிமனித சுதந்திரத்தை ஏறக்குறைய இழந்துவிட்டதாகவே கருதும் நிலையில், யாரும் கண்டுகொள்ளாத, அவர் அவராக இருக்க முடிகிற இமயமலைக்கு அடிக்கடி சென்று வருகிறார்.

அதே போல் மற்றொரு நடிகரும் 14 ஆண்டுகளாக இமயமலைக்கு சென்றுவருவதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவர் இளம்வயது நடிகர்களில் ஒருவரான வித்யுத் ஜம்வால்தான். துப்பாக்கி படத்தில், ஸ்லீப்பர் செல்களை உருவாக்கும் முக்கிய லீடராக நடித்த வில்லன் நடிகர்தான் அவர். இந்த படத்தில் அவரது வில்லன் கேரக்டர் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து அஞ்சான் படத்தில், சூர்யாவுக்கு நண்பனாக நடித்திருப்பார். இந்த படத்திலும் அவரது நடிப்பு பேசும்படி சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவரை வில்லன் குரூப் கொன்றுவிட, அவர்களை பழிவாங்க ராஜூபாய் கேரக்டரில் சூர்யா வருவதுதான் அஞ்சான் படம். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார்.

துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்த வித்யுத் ஜம்வால், இந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இவர் 14 ஆண்டுகளாக இமயமலைக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால், அங்கே ஒரு வாரத்துக்கு மேல் தனிமையில் இருக்கும் அவர் அந்த காடுகளுக்குள் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பிறந்த மேனியாக தான் திரிவாராம். அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இது ஆன்மீகமா, வியாதியா எனத் தெரியவில்லை என்றாலும், இது சற்று மிகையானதாக தான் தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்