தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை மட்டும் எடுத்து அதன் மூலம் பேமஸ் ஆனவர் இயக்குனர் சுராஜ். சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த அவர், சரத்குமார் நடித்த மூவேந்தர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதன்பிறகு சத்யராஜுடன் ஜோடி சேர்ந்த அவர் குங்கும பொட்டு கவுண்டர் மற்றும் மிலிட்டரி ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும், ஓரளவு பேசப்பட்டது. இப்படியான சூழலில் தான் தலைநகரம் படத்தை இயக்கினார் சுராஜ்.
தனது குரு சுந்தர்சியை முதன்முதலாக நடிகராக்கி அழகு பார்த்த சுராஜ், அந்தத் திரைப்படத்தை வெற்றி படமாக்கினார். பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியான இது, மிகப்பெரிய வெற்றியைப் பெற வடிவேலுவின் நாய் சேகர் காமெடியும் கிளிக்கானது.
தலைநகரம் படத்தின் வரும் காட்சிகளை அனைத்தையும் ஒரே ஆளாக தூக்கி சாப்பிட்டு படத்தை வெற்றி பெறச் செய்தார் வடிவேலு. இதனைத் தொடர்ந்து மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்களை சுராஜ் இயக்கினார். தொடர்ந்து அவர் இயக்கிய அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன், கத்தி சண்டை ஆகிய திரைப்படங்கள் தோல்வியடைந்தன.
இந்நிலையில் தனது மருதமலை திரைப்படம் குறித்து சுராஜ் பேசியுள்ளார். அதில், மருதமலை திரைப்படம் முதல் முதலாக விஜய்யிடம் நான் சென்றது. அவருக்கும் கதை பிடித்திருந்தது. முன் தொகையும் இதற்காக அவர் பெற்றார். முதல் முறையாக அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் சச்சின் திரைப்படத்திற்காக அவர் கால்சீட் கொடுத்திருந்தார்.
இதன் காரணமாக அவரால் மருதமலையில் நடிக்க முடியாமல் போனது. இதே கதையை அஜித்திடமும் கூறினேன். அவருக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது. அதேசமயம் அவர் கிரீடம் படத்தில் நடித்து வந்ததால், மருதமலை திரைப்படத்தில் கமிட்டாக முடியவில்லை. இதன் பிறகு தான் நான் அர்ஜுனை அணுகினேன். அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இப்படியாகத்தான் மருதமலை உருவானது என்று கூறியிருக்கிறார்.





