- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரபூர்வமான அறிவிப்பு, போடு வெடிய… கட்சி பெயரிலேயே வெற்றியை கொண்டு...

நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரபூர்வமான அறிவிப்பு, போடு வெடிய… கட்சி பெயரிலேயே வெற்றியை கொண்டு வந்துட்டாரே- செம மாஸ் தான்!

- Advertisement -

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவது பற்றி பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இப்போது அது கட்சி பெயர் அறிவிப்பாக வெளிவந்து ரசிகர்களைே :உற்சாகமடைய செய்துள்ளது. கட்சி பெயரிலேயே வெற்றி இருப்பதால், நிச்சயம் இது விஜய்க்கு வெற்றிகரமான அரசியல் களமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து, படத்தில் நடிப்பாரா அல்லது அரசியல் கட்சி துவங்குவாரா என்ற குழப்பம் நீடித்த நிலையில், மதுரையில் ஏப்ரல் மாதத்தில் மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. கட்சி மாநாட்டில்தான் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

எனினும் விஜய் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா, அல்லது 2026ம் ஆண்டில் நடக்கப் போகும் சட்டசபை தேர்தலில்தான் அவர் நேரடியாக களம் இறங்கப் போகிறாரா என பல்வேறு குழப்பங்கள் நீடித்த வந்த நிலையில், இன்று அதற்கு பதில் தெரிந்து விட்டது.

நடிகர் விஜய் ஆரம்பிக்கப் போகும் அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக்கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரிலேயே ஒரு மாஸ் இருப்பதால், சொல்வதற்கும் இதில் ஒரு கெத்து இருப்பதாக ரசிகர்கள் பலரும் கட்சி பெயரை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

முதலில் தமிழக முன்னேற்ற கழகம் என்றுதான் விஜய் பெயர் வைக்க திட்டமிட்டார். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்லும்போது டிஎம்கே என்றுதான் குறிப்பிட்ட முடியும். ஏற்கனவே டிஎம்கே, ஏடிஎம்கே என்ற பெயர்களில் சீனியர் கட்சிகள் உள்ளநிலையில், குழப்பம் ஏற்படும் என்ற கருத்து நிலவியது.

 

இதையடுத்து தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் டிவிகே என்றுதான் இனி விஜயின் கட்சி பெயர் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். விஜய் என்ற பெயருக்கும் ஒரு விதத்தில் வெற்றி என்று அர்த்தம். அதனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கி விட்டார் நடிகர் விஜய்.

- Advertisement -

சற்று முன்