- Advertisement -
சமீபத்தில் வெளியான அப்பாகுட்டி படத்தின் பிரமோசனுக்காக நடிகர் விஜய் ஆண்டனி சென்னை முதல் கோவை வரை ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மென்டில் பயணித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கார்ல பிளைட்ல போற நீங்க எப்படி டிரெயின்ல வந்தீங்கன்னு பலர் கேக்குறாங்க. அதுல என்ன கஷ்டம் இருக்கு? நான் கஷ்டப்பட்டு வந்தவன்தான். சின்ன வயசுல எளிமையான வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து இருக்கேன். அப்போ எனக்கு டிரெயின்ல போறதே பெரிய கனவு தான். அப்படி இருந்த நான் இன்னைக்கு டிரெயின்ல போனது ரொம்ப சந்தோசமாக தான் இருந்தது என்று நடிகர் விஜய் ஆண்டனி யதார்த்தமாக கூறியிருக்கிறார்.





