சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் மிஸ்கின் கைதேர்ந்தவராக இருக்கிறார். சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இயக்குனராக தொடங்கிய அவரது பயணம் தற்போது வரை நீடித்து வருகிறது. இதில், அஞ்சாதே யுத்தம் செய் உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை அவர் பதிவு செய்திருக்கிறார்.
மிஸ்கின் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் பிசாசு. அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்கள் கொடி கட்டி பறந்தன. அப்போதுதான் பிசாசு என்னும் கான்செப்ட்டை அவர் கையில் எடுத்தார். ஹாரர் திரைப்படத்தில் காதலைப் புகுத்தி அவர் புதிய புரட்சியை செய்தார்.
இப்படியான சூழலில்தான் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் எடுக்க முடிவு செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பே இதன் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றது. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் இடம்பெற்றுள்ளார்.
பிசாசு 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ்கின் கையில் எடுத்த திரைப்படம் ட்ரெயின். ஓடும் ரயிலில் பரபரப்பான காட்சிகளுடன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. கலைப்புலி எஸ் தானு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக வருகிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களின் பணிகள் முடிந்து விட்டாலும் இன்னும் ரிலீஸ் தேதி மட்டும் முடிவு செய்யப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு பிசாசு 2 திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின் பிசாசு 2 குறித்து கூறியிருப்பதாவது, பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள் இருக்கும் என்று ஆண்ட்ரியாவிடம் கூறினேன். கதையைக் கேட்ட பிறகு அவரும் ஒப்புக் கொண்டார். இதற்காக ஒரு போட்டோ சூட் நடத்தவும் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இது இளைஞர்களை தவறான பாதைக்குச் செல்ல வழி வகுக்கும் என்பதை உணர்ந்தேன். நான் மட்டும் அந்த நிர்வாண காட்சியை எடுத்திருந்தால், பிசாசு 2 திரைப்படம் இப்போதைக்கு வெளியாகியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.





