- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 22ம் தேதி, த வெ க கட்சித் தலைவராக தனது 50வது பிறந்த நாளை...

வருகிற 22ம் தேதி, த வெ க கட்சித் தலைவராக தனது 50வது பிறந்த நாளை கொண்டாட தயாராகும் விஜய் – அதற்கு முன் 21ம் தேதி நடக்கும் தரமான சம்பவம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வலிமை, துணிவு, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1 உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூலை மாதம் துவங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளுக்காக, படப்பிடிப்பை நடிகர் விஜய் தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே துணிவு படத்துக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகளாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தவித்து வருகிறார் டைரக்டர் எச் வினோத். இதற்கிடையே ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை எச் வினோத் இயக்க இருந்த நிலையில், அதையும் கமல்ஹாசன் 2025ம் ஆண்டு இறுதி வரை தள்ளி வைத்து, எச் வினோத்துக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்கனவே தந்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இதற்கிடையே விஜய் படமும், சில மாதங்கள் தள்ளிப்போகும் நிலையில், விஜய் தனது 50வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறார். இதுவரை நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடிய நிலையில், இப்போது கட்சி தலைவராக, தனது தொண்டர்களுடன் கொண்டாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் நடிப்பில், 20 ஆண்டுகளுக்கு முன்வந்த கில்லி படம் சமீபத்தில் வெளியாக தமிழ்நாடு முழுவதும் சக்கைப் போடு போட்டது. தொடர்ந்து மலையாள படங்களே தமிழ்நாட்டில் ஹிட் ஆன நிலையில், அந்த படங்களுக்கு நிகராக, 20 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் வசூல் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வருகிற 22ம் தேதி விஜய் 50வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான 21ம் தேதி, நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து மெகாஹிட் படமாக வெற்றி பெற்ற பகவதி படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2002ல் வெளியான படம் இது. இயக்குனர் ஏ வெங்கடேஷ் டைரக்ட் செய்திருந்தார். இதில் கோர்ட் வளாகத்தில் டீக்கடை நடத்துபவராக விஜயும், அவரது தம்பியாக ஜெய்யும், டீக்கடை ஊழியராக வடிவேலுவும் நடித்திருந்தனர். இதில் ரீமாசென் ஹீரோயினாகவம், ஆஷிஷ் வித்யார்த்தி வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் வரும் 21ல், ரி ரிலீஸ் ஆகிறது.

சற்று முன்