- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகை திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்திய நடிகர் விஜய், தனது தீவிர ரசிகையின் திருமணம்...

பிரபல நடிகை திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்திய நடிகர் விஜய், தனது தீவிர ரசிகையின் திருமணம் என்பதால் கலந்து கொண்டாரா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இப்போது அவர் நடித்துவரும் தளபதி 69 படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் எழுச்சியும் இருக்கிறது. அதை சமீபத்தில் அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்திய அரசியல் மாநாட்டில் நிரூபித்து காட்டியிருந்தார். 50 ஆயிரம் பேருக்கு அனுமதிக்கப்பட்ட அந்த மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

- Advertisement -

நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கிறார். அதே போல் ரஜினி படத்தை காட்டிலும் விஜய் படத்துக்கு அதிக வரவேற்பும், வசூலும் இருந்து வருகிறது. இந்த ஆண்டில் வெளியான ரஜினி நடித்த வேட்டையன் படம் ரூ. 265 கோடியாக உள்ளது. ஆனால் விஜய் நடித்த தி கோட் படம் 455 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிலையில், இதோ அதோ என போக்கு காட்டிய ரஜினிகாந்த் கடைசி வரை அரசியலுக்குள் வராமல் எஸ்கேப் ஆகி விட்டார். ஆனால் நடிகர் விஜய் அதிரடியாக தனது கட்சி பெயரை அறிவித்து, அரசியலுக்குள் வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இன்று கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், ஆண்டனி திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். பட்டு வேட்டி சட்டையில் சென்ற அவருக்கு திருமண நிகழ்ச்சியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த பலரும் நடிகர் விஜயுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

நடிகர் விஜயுடன் ஏஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் மற்றும் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா ஆகிய 2 படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அத்துடன் பல நேர்காணல்களில் நான் தளபதியின் மிக தீவிரமான ரசிகை, ஆரம்பத்தில் இருந்தே அவரது ரசிகையாக இருந்து அவர் நடித்த படங்களை மிகவும் ரசித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்