நடிகர் விஜய் சினிமா நடிகராக இருந்த போது சினிமா சார்ந்த விமர்சனங்களில் சர்ச்சைகளில் மட்டுமே அவரது பெயர் அடிபட்டது. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு நபர் யாரென்றால் அது விஜய் ஆகத்தான் இருப்பார். அந்தளவுக்கு அவர் மீதான விவாதம் அதிகரித்து விட்டது.
சமீபத்தில் விஜயின் அப்பா அம்மா அதாவது எஸ்ஏ சந்திரசேகர் – ஷோபா இருவரது 80ம் ஆண்டு விழா நடந்தது. கோவிலில் நடந்த விசேஷ பூஜையில் அவர்கள் பங்கேற்றனர். தனது பெற்றோருக்கு நடந்த மிக முக்கியமான அந்த விசேஷத்தில் மகன் விஜய் கலந்துக்கொள்ளவில்லை.
அதே போல் விஜயின் மகள் திவ்யா சாஷா வெளிநாட்டில் படித்து பட்டம் வாங்கியிருக்கிறார். அந்த பட்டமளிப்பு விழாவிலும் ஒரு அன்பான தந்தையாக விஜய் போய் பங்கேற்கவில்லை. அதே போல் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் சிம்கா படப்பிடிப்பிலும் ஒரு நாள் கூட விஜய் வந்து நேரில் வந்து பார்க்கவில்லை.
இப்படி தனது பெற்றோர், தனது பிள்ளைகளை கூட கண்டுகொள்ளாத ஒரு நபராக இருக்கிற நடிகர் விஜய், தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் ஜோடியாக நடிகை திரிஷாவுடன் வந்து கலந்துக்கொண்டார். இப்படிபட்ட ஒரு வேறுபட்ட மனிதராக வித்யாசமாக நடந்துக்கொள்ளும் அவரை தான் தமிழ்நாட்டு மக்களில் பலர் தலைவர் என்று கொண்டாடி முட்டுக்கொடுத்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் மும்பையில் நடந்த இயக்குனர் அட்லி இல்ல நிகழ்ச்சியிலும் விஜய் நேரில் போய் கலந்துக்கொண்டார். அட்லியின் மனைவி பிரியாவுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் மும்பை சென்றிருக்கிறார். இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது நடிகர் விஜய் இந்த முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை. குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே அவருக்கு கிடைக்கும் ஓட்டுகளால் அவர் நிச்சயம் முதல்வராக முடியாது. அதனால் தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ள விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அதுகுறித்து அட்லியிடம் பேசுவதற்காக தான் இந்த மும்பை பயணம் என்று தெரிய வந்துள்ளது.





