- Advertisement -
Homeபொழுதுபோக்கு‘லியோ’ படம் லோகேஷ் படமாக இருக்குமா? விஜய் படமாக இருக்குமா? - தொடரும் ‘அப்டேட்’டுகளால் எதிர்பார்ப்புகள்...

‘லியோ’ படம் லோகேஷ் படமாக இருக்குமா? விஜய் படமாக இருக்குமா? – தொடரும் ‘அப்டேட்’டுகளால் எதிர்பார்ப்புகள் எகிறிப் போய் தவிக்கும் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய், அஜீத் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது, ரசிகர்களின் கொண்டாட்டம் அதகளமாக இருக்கிறது. சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்துக்கு, ரசிகர்கள் காட்டிய உற்சாகம் அளவு கடந்தது. ரஜினியின் மாஸ் ஸ்டைலும், அலட்டிக்காத நடிப்பும் வேற லெவலில் வசூலை அள்ளித் தந்தது. ரஜினியை தவிர, வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் இந்த படம், பிளாக் பஸ்டர் மூவியாக இருந்திருக்காது என்பதும் உண்மை.

அதே வேளையில், படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் நடிப்பும் இந்த மெகா வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. தமன்னாவின் காவாலா பாட்டும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்றவர்களும் கவனிக்கதக்கவர்களாக இருந்தனர்.
இதே போன்ற ஒரு மெகா ஹிட் வெற்றியை எதிர்பார்த்துதான், விஜய் ரசிகர்கள் லியோ படத்துக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதற்கு முந்தைய விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள், வசூல் ரீதியாக திருப்தி கொடுத்தாலும், ரசிகர்களே நொந்துகொண்ட படங்களாக இருந்து ஏமாற்றி விட்டன. கமல் நடித்த விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து, லியோ படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லியோ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், அடுத்த மாதம் 19்ம் தேதி படம் திரைக்கு வெளிவர இருக்கிறது. அதற்கு முன்பாக வரும் 30ம் தேதி, படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் அடுத்தடுத்த புரமோசன்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜயை பொருத்த வரை இரண்டு படங்கள் தொடர்ந்து பேசப்படாததால், இந்த படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

விஜய் படங்களை பொருத்த வரை, வரம்புக்கு மீறிய பில்டப் காட்சிகள் இருப்பது வழக்கம்.இது கடுமையாக விமர்சனங்களையும் சந்திக்கும். அந்த வகையில், ‘லியோ’ சாகச காட்சிகள், அதாவது பில்டப் நிறைந்த விஜய் படமாக இருக்குமா, அல்லது லியோ, லோகேஷ் ஏற்கனவே இயக்கிய மாநகரம், கைதி, விக்ரம் படங்களின் சாயலில் இருக்குமா என ரசிகர்களிடையே பட்டிமன்றமே நடந்து வருகிறது.

சற்று முன்