- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கொடி, பனையூரில் கட்சிக் கொடியேற்றிய தவெக தலைவர் விஜய் பேச்சு -...

இது வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கொடி, பனையூரில் கட்சிக் கொடியேற்றிய தவெக தலைவர் விஜய் பேச்சு – தமிழக மக்களுக்காக உழைப்போம் என்றும் சபதம்!

- Advertisement -

நடிகர் விஜய் துவங்கியுள்ள அரசியல் இயக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் மற்றும் கொடியேற்று விழா, உறுதிமொழி ஏற்பு, கட்சி பாடல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை, பனையூரில் உள்ள விஜய்க்கு சொந்தமான பண்ணை வீட்டில், கட்சி தலைமை நிலைய செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் துவங்கியது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோர் பங்கேற்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 300 பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நீலாம்பாக்கம் கடற்கரை பங்களாவில் இருந்து காரில் புறப்பட்ட விஜய் 9 மணியளவில் பனையூர் கட்சி அலுவலகத்தை வந்தடைந்தார்.

- Advertisement -

விழாவில் துவக்கமாக கடவுள் வாழ்த்து, வரவேற்புரையை தொடர்ந்து நடிகர் விஜய் தலைமையில், கட்சியினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மேடையில் நெஞ்சில் கைவைத்தப்படி நடிகர் விஜய் உறுதிமொழி வாசிக்க, கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து மேடையில் கட்சியை கொடியை அறிமுகப்படுத்திய விஜய், வளாகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் கல்வெட்டை திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்றினார்.

தொடர்ந்து, கட்சி பாடலை அறிமுகப்படுத்திய பின், விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி, இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக கருதுகிறேன், இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சி ரீதியாக நம்மை தயார்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.

- Advertisement -

புயலுக்கு பின் அமைதி மாதிரி, நம் கொடிக்கு பின்னாலும் சுவாரஸ்யமான வரலாற்று குறிப்பு உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கும் அந்த நாளில் நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோஷமா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்.

இது வெறும் கட்சிக்கொடியாக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் விழாவில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்