- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது - கட்சி பாடலை அறிமுகப்படுத்தி கட்சிக் கொடி...

தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது – கட்சி பாடலை அறிமுகப்படுத்தி கட்சிக் கொடி ஏற்றிய தவெக தலைவர் விஜய் – போட்றா வெடிய…

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தனது கட்சி பிரவேசத்தை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலைய அலுவலகத்தில், இன்று காலை தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். தொடர்ந்து தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் அவர் வெளியிட்டார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சிக் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் கொடியேற்றுதல், கட்சி பாடல் வெளியிடும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள அவரது தலைமை நிலைய அலுவலகத்தில் இன்று காலை நடக்க உள்ளதாக, நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதன்படி இன்று அந்த நிகழ்ச்சி பனையூரில் உள்ள அவரது தலைமை நிலைய கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக விஜயின் பெற்றோர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நீலாங்கரையில் உள்ள தனது பங்களாவில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட நடிகர் விஜய், 9 மணியளவில் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. விழாவில் 300 பேர் என்ற அளவில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

- Advertisement -

விழாவின் துவக்கமாக கடவுள் வாழ்த்து பாடப்பட்டதை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் வரவேற்றார். அதன்பிறகு கட்சிக் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். மஞ்சள், அடர் சிவப்பு நிறத்தில் 2 போர் யானைகள் முன்னங்கால்களை தூக்கியபடி இருபுறமும் இருக்க நடுவில் வாகைப்பூ படத்துடன் கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

மேடையில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின் நடிகர் விஜய், கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த 40 அடி கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து விழாவில், தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற வரிகளுடன் கட்சி பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது வீடியோவில் விஷூவல் காட்சிகளுடன் ஒளிபரப்பான நிலையில், கட்சியினர் ஆராவாரம் செய்தனர்.

- Advertisement -

சற்று முன்