- Advertisement -
Homeபொழுதுபோக்குஎச் வினோத் இயக்கும் விஜய் 69 படம், நடிகர் கமல்ஹாசன் சொன்ன கதையில் உருவாகுதா? -...

எச் வினோத் இயக்கும் விஜய் 69 படம், நடிகர் கமல்ஹாசன் சொன்ன கதையில் உருவாகுதா? – இதென்னப்பா புது டிவிஸ்ட்டா இருக்குதே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருக்கிறார். தவிர, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஆனால் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பெயரும், புகழும் பெற்ற கமல்ஹாசனுக்கு, அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

குறிப்பாக நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் கமல்ஹாசனுக்கும், அவரது கட்சி வேட்பாளர்களுக்கும் எந்தவிதமான பெரிய வரவேற்பும் மக்கள் மத்தியில் கிடைக்கவில்லை. உதாரணமாக, நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் உள்ள அங்கீகாரமும் வரவேற்பும் கூட கமல்ஹாசனுக்கு இல்லை என்பதே இதில் கசப்பான உண்மை.

- Advertisement -

ஏனெனில் இதற்கு முக்கிய காரணமே நடிகர் கமல்ஹாசன்தான். சினிமா நடிகராக அவர் வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடந்துக்கொள்ளலாம். ஆனால் அரசியல்வாதியாக வரும்போது பொது வாழ்வில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் சில உண்மை தன்மைகளும், நேர்மை ஒழுக்கங்களை எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் 2 மனைவிகள் விவாகரத்து, கெளதமியுடன் தாலி கட்டாமல் பல ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை, சக நடிகைகளுடன் நெருக்கமான தொடர்பு என கமல்ஹாசன் மீது பலவிதமான ஒழுக்கம் சார்ந்த சர்ச்சைகள் இருப்பதால், பெண்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு பெரிய அங்கீகாரம் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில், கமல்ஹாசன் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருந்த படம், திடீரென நிறுத்தப்பட்டது. ஏனெனில் தக்லைப், கல்கி, இந்தியன் 2, இந்தியன் 3 படங்களின் படப்பிடிப்பால் எச் வினோத் இயக்க வேண்டிய கமல் படம் தள்ளி தள்ளிப் போனது. இதையடுத்து, 2 ஆண்டுகள் வரை எச் வினோத்தை கமல் வெயிட்டிங்கில் வைத்த நிலையில், விஜய் 69 படத்தை இயக்கும் வாய்ப்பை, எச் வினோத்துக்கு விஜய் அளித்துள்ளார்.

இப்போது விஜய் நடிக்கும் எச் வினோத்தின் படத்தின் கதை, கமல் நடிக்க வேண்டிய அரசியல் கதை தான் என தெரிய வந்துள்ளது. ஸ்டோரி டிஸ்கஷனில் கமல் சொன்ன பல அரசியல் அனுபவங்களை கொண்டுதான், எச் வினோத் இந்த க்தையை உருவாக்கி உள்ளார். அதனால் படத்தின் பெரும்பகுதி கமலின் உருவாக்கம்தான். இந்த கதையை விஜய் ஓகே சொல்லி நடிக்கவும் உள்ளதால், விஜய் 69 படத்தின் கதை கமல் உருவாக்கியதுதான் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்