நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் அதிரடி ஆட்டத்தை துவங்கியிருக்கிறார். கமல்ஹாசன் சரத்குமார் கார்த்திக் மன்சூர் அலிகான் கருணாஸ் போன்ற நடிகர்கள் வரிசையில் நடிகர் விஜயும் அரசியலுக்கு வந்திருக்கிறார் என சாதாரணமாக நினைத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு இப்போது அவர்களது கண்ணில் விரலை விட்டு சுழற்றும் ஒரு போர்வாளாக நடிகர் விஜய் மாறியிருக்கிறார்.
குறிப்பாக விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் கடந்தாண்டில் நடந்த தவெக முதல் மாநில மாநாட்டிலும், இப்போது மதுரையில் 21ம் தேதி நடந்த தவெக கட்சியின் 2வது மாநில மாநாட்டிலும் விஜய்க்கு லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்களை ரசிகர்களை பார்த்து தமிழக அரசியல் கட்சிகள் அரண்டு போய்விட்டன.
நாள் முழுவதும் கொளுத்தும் வெயிலில் உண்ண உணவின்றி தனது தலைவனின் வருகைக்காக அவரது பேச்சை கேட்பதற்காக குடும்பத்துடன் வந்த பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை தொண்டர்களை பார்த்து அரசியல் கட்சிகள் மிரண்டு போயிருக்கின்றன. சொந்த செலவில் ஒரு நாள் சம்பளத்தை இழந்துவிட்டு வந்த இந்த லட்சக்கணக்கான மக்கள், நிச்சயம் தவெக ஓட்டுகளாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கிடையே இதுவரை நடிகர் விஜய் தனது கட்சி மேடைகளில் தனது அரசியல் எதிரியான திமுக குறித்தும் கொள்கை எதிரியான பாஜக குறித்தும் சரமாரியாக விமர்சித்து கேள்விகளை எழுப்பி வருகிறார். இப்போது அதிமுக குறித்தும் அவர் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நாம் தலைவர் கட்சி என பிற கட்சிகளை எல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வது இல்லை.
இப்போதைய அரசியல் களத்தில் உள்ள சட்டசபை தேர்தல் நிலவரப்படி நடிகர் விஜய்க்கு மக்களிடம் பெரும்பான்மையான ஆதரவும் வரவேற்பும் இருக்கிறது. நிச்சயமாக விஜய்க்கு சட்டசபை தேர்தலில் வாக்களிப்பது என்ற முடிவில்தால் நடுநிலையாளர்களும் மாற்றுக் கட்சியை சேர்ந்த மக்களும் இருக்கின்றனர். திமுக அதிமுக ஆட்சி இனி வேண்டாம். மாற்று கட்சி வேண்டும் என்று நினைப்பவர்களின் ஒரே சாய்ஸ் ஆக இருப்பது இப்போது நடிகர் விஜயின் தவெக மட்டுமே.
இந்நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்க நடிகர் விஜய் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து சில காங்கிரஸ் தலைவர்களும் விஜயுடன் பேசியிருக்கின்றனர். விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விஜய் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் திமுக வருகிற தேர்தலில் பலத்த அடி வாங்கும் என தேர்தல் நிலவரங்கள் சொல்வதால், ராகுலும் விஜயுடன் கைகுலுக்கி கை கோர்த்து விடுவார் என்றும் தகவல் கசிந்துள்ளது.





