- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகர் ஷாருக்கானை ஓரம்கட்டி முன்னேறிய நடிகர் விஜய், இப்படி பட்டைய கௌப்பறாரே? அரசியலிலும் இது...

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை ஓரம்கட்டி முன்னேறிய நடிகர் விஜய், இப்படி பட்டைய கௌப்பறாரே? அரசியலிலும் இது நடக்குமா? – எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவர் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் ரூ. 200 கோடி 300 கோடி ரூ. 600 கோடி என வசூலில் பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த சாதனைகளை ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களால் கூட எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த படம் என்றாலே அது மோசமான, ஏமாற்றம் தரும் படமாக இருந்தாலும் கூட வசூலில் பெரிய சாதனை படைப்பது ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அபிமானமும் அங்கீகாரமும்தான். விஜய் படம் என்றாலே விஜய்க்காக படம் பார்க்க வரும் கூட்டம் மிக மிக அதிகம். அதுவும் விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ், ரிபீட் ஆடியன்ஸ் மிக மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஆந்திரா கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால் தான் அவர் படம் வெளிவரும் போதெல்லாம் ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அவரது சிங்கிள்ஸ் வெளியாகும் போதும் படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் போதும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. மில்லியன் கணக்கில் லைக்ஸ் வருகிறது. பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகளவில் குவிகிறது. மற்ற நடிகர்களுக்கு இல்லாத பெரிய செல்வாக்கை நடிகர் விஜய் பெற்றிருக்கிறார்.

ஆனால் இப்போது நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடித்துவிட்டு அத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தமிழக அரசியலில் களத்தில் இறங்குகிறார். வரும் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்தவும் விஜய் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அதாவது 69வது படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் முதன்முறையாக விஜய் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளம் ரூ 275 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.

தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் தி கோட் படத்தில் நடிக்க நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், 69வது படத்தில் 75 கோடி ரூபாய் அதிகமாக 275 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இந்திய சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க இதுவரை 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி முன்னிலையில் இருந்தவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இப்போது அவரையும் முந்துகிற அளவில் நடிகர் விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்பது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்