- Advertisement -
Homeபொழுதுபோக்குகொலை மிரட்டல் விடுத்த ரஜினி ரசிகர்கள்.. நக்கலாக பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

கொலை மிரட்டல் விடுத்த ரஜினி ரசிகர்கள்.. நக்கலாக பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -

ஜெயிலர் படம் நாளை வெளியாகவிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் திருவிழா போல் கொண்டாடுவதற்கு அவரின் ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இப்போதே கட் அவுட், பேனர் என தியேட்டர்கள் கலைகட்ட தொடங்கியிருக்கின்றன. அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதால் நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதால் ரஜினிகாந்த்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனோ ஜெயிலர் படத்தையும், ரஜினிகாந்த்தையும் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தெல்லாம் இல்லை. அவருக்கு பயம் வந்துவிட்டது என தெரிவித்துவருகிறார்.

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை சொன்னதிலிருந்து ரஜினியை பருந்து என்றே கூறுகிறார் ப்ளூ சட்டை மாறன். அதுமட்டுமின்றி ரஜினி குறித்தும், அவரது கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இன்று காலைகூட தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களுக்கு கறிசோறு போட ஆசை. ஆனால் இது சைவ மண்டபம் என குறிப்பிட்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன், தமிழ் சினிமாவில் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உணவளித்தது இரண்டு பேர் மட்டுமே. எம்ஜிஆரும், விஜயகாந்த்தும்தான் அவர்கள் என்று விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினிகாந்த் ரசிகர்களில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்ட ஆடியோவில், “ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படம் பார்க்க கமலா சினிமாஸுக்கு வருகிறார். 12.30 மணி ஷோவுக்கு வருகிறார். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள். இந்த முறை மிஸ்ஸே ஆகக்கூடாது. சரியா ஸ்கெட்ச் போட்டு போடணும். யாரும் மறந்துறாதீங்க ப்ளூ சட்டை மாறன் 12.30 மணிக்கு கமலா சினிமாஸுக்கு வரான் ப்பா” என கூறியிருக்கிறார். இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் காவல் துறையில் புகாரும் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து மாறன் பகிர்ந்திருக்கும் ட்வீட்டில், “டேய்.. நான் மாயாஜால்னு தெளிவாத்தான சொன்னேன். இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம கமலா தியேட்டர்னு பொய் சொல்லி.. சும்மா இருக்கற பசங்களையும் ரேக்கி விட்டுட்டு இருக்க? அதாவது நீ கமலா தியேட்டர்ல போய் ‘ப்ளூ சட்டை இங்க வரவே இல்லை. பயந்துட்டான்’னு ட்வீட் போட்டு ஊரை ஏமாத்தத்தான இப்படி ஒரு மொக்கையான ப்ளான் போட்ட? ஏன்டா இப்படி LKG பசங்க ரேஞ்சுக்கு இருக்கீங்க?’” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ரஜினி ரசிகர் ஒருவரிடம் ப்ளூ சட்டை மாறன், ‘நான் ஜெயிலர் படம் பார்க்க மாயாஜால் வருகிறேன். முடிந்தால் வா’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்